← Back to list
ஈராயிரம் பேர் Covid-19-னிலிருந்து மீண்டனர்!
Nov 30, 2020
நாட்டில் இன்று புதிதாக 1212 புதிய Covid-19 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
அவற்றுள் 1203 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியவை.
ஈராயிரத்துக்கும் அதிகமானோர் அத்தொற்றிலிருந்து பூரண நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதிதாக மூன்று மரணங்கள் பதிவான வேளை மரண எண்ணிக்கை 360ஆக உயர்ந்துள்ளது.
_________
சிலாங்கூர் மற்றும் KLலில் அமுலில் உள்ள கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது வரும் வெள்ளிக்கிழமை வாக்கில் தெரிய வரும்!
சுகாதார அமைச்சின் ஆலோசனைக்குப் பிறகு அது குறித்து அறிவிக்கப்படும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Sri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
சிலாங்கூரிலும் KLலிலும் அமுலில் உள்ள EMCO வரும் டிசம்பர் ஆறாம் தேதியோடு முடிவடைகிறது.
______
நெகிரி செம்பிலான், Nilaiயிலுள்ள Putra Pointடில் அமுலில் இருந்த கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அட்டவணைப்படி இன்றோடு முடிவடைகிறது!
Pelanjutan PKPD di Asrama Pekerja Top Glove selama 14 hari lagi bermula 1 Disember 2020 sehingga 14 Disember 2020.
எனினும் கிள்ளானிலுள்ள கையுறை தயாரிப்பு தொழிற்சாலையின்றின் தொழிலாலர் தங்கும் விடுதியில் அமுலில் உள்ள EMCO நாளை தொடங்கி மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
_____
கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டு அதிகமான மலேசியர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட முன்வந்துள்ளனர்!
புகைப்பிடிப்பவர்கள் அப்பழக்கத்தைக் கைவிட உதவும் அரசாங்கத்தின் இலவச திட்டமான Mquit-டில் பதிந்து கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை, இந்த கொரொனா காலகட்டத்தில் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Adham Baba இன்று மக்களவையில் தெரிவித்தார்.
கடந்தாண்டு அத்திட்டத்தின் கீழ் பதிந்து கொண்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 600 ஆகவே இருந்த நிலையில், இவ்வாண்டு அதன் எண்ணிக்கை மூவாயிரத்து 400ஆக உரந்துள்ளதாக அவர் சொன்னார்.
_____
நாட்டில் சில மாநிலங்களில் இன்றிரவு 9 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
பெர்லிஸ், பேராக், பினாங்கு, கெடா, பஹாங், சிலாங்கூர், ஜொகூர் ஆகிய மாநிலங்கள் அதிலடங்கும்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather