← Back to list
ஊழியர் சேமநிதி வாரிய பங்களிப்புக்க விண்ணப்பம்!
Nov 29, 2020
ஊழியர் சேம நிதி வாரிய சந்தாதாரர்கள் தங்களின் EPF பங்களிப்பை 11 விழுக்காடாக நிலைநிறுத்த, வரும் டிசம்பர் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கத் தொடங்கலாம்!
அதனை முதலாளிமார்கள் i-Akaun வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என EPF தெரிவித்தது.
Covid-19 பரவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டிலுள்ள எந்த EPF முகப்புகளுக்கும் பொது மக்களோ முதலாளிமார்களோ வர வேண்டாம்.
எல்லாவற்றையும் இணையம் மூலமாகவே செய்து கொள்ளலாம் என EPF தெரிவித்தது.
மேல் விவரங்களுக்கு www.kwsp.gov.my
______
நாட்டில் அண்மைய காலமாக பதிவாகி வரும் Cluster சம்பவங்களுக்கு முதன்மை காரணம், சமூக ஒன்று கூடல் நிகழ்வுகளும், சமைய நிகழ்வுகளும் தான் என சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பேராக்கின் Enggor clusterரும் KL மற்றும் சிலாங்கூரில் பதிவாகியுள்ள Indah Mas clusterரும் குடும்ப ஒன்று கூடல் நிகழ்வின் போது ஏற்பட்டிருப்பதை Tan Sri Dr Noor Hisham Abdullah சுட்டிக் காட்டினார்.
மேலும சபாவில் Inai மற்றும் Jambul clusterகளும் விழாவொன்றின் போது பரவியிருப்பதாக அவர் சொன்னார்.
எனவே பொது மக்கள் கூட்டம் நிரைந்த இடங்களில் SOPக்களைப் பின்பற்றுவதில் அலட்சியம் காட்ட வேண்டாம் என Hisham Abdullah கேட்டுக் கொண்டார்.
_______
இதனிடையே நாட்டில் 24 மணி நேரத்தில் ஆறு புதிய Cluster சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
நேற்று முன் தினம் தொடங்கி நேற்று நன்பகல் வரை சபாவில் நான்கு Clusterகளும், சிலாங்கூர் மற்றும் KLலில் இரு Clusterகளும் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
_______
நாட்டில் நேற்று ஆயிரத்து முன்னூற்று 15 புதிய Covid-19 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
சபாவில் தான் ஆக அதிகமாக நானூருக்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
244 சம்பவங்களுடன் சிலாங்கூர் இரண்டாம் இடத்தில் உள்ளது.
________
சிலாங்கூர் PJவில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் உள்ள பகுதியில் பணியாற்றிய காவல் வீரரை கொச்சை வார்த்தைகளால் திட்டிய லாரி ஓட்டுனர் விசாரணைக்காக மூன்று நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே குற்றப் பின்னணி இருக்கும் அவ்வாடவர் காவலதிகாரி தம்மை வழி மறித்ததற்காக அவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரிகிறது.
________
JBயில், உள்நாட்டு ஆடவரைத் தாக்கிக் காயப்படுத்தியதாக நம்பப்படும் 30 வயது மதிக்கத்தக்க வங்காளதேச ஆடவருக்குக் காவல் துறை வலை வீசி வருகின்றது.
சம்பந்தப்பட்ட மலேசியரை இரும்புக் கம்பியால் அந்த வங்காள தேச ஆடவர் தாக்கிய காட்சிகள் அடங்கிய காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை அடுத்து அவர் தேடப்பட்டு வருகின்றார்.
பாதிக்கப்பட்ட ஆடவர் Sultanah Aminah மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் காவல் துறை தெரிவித்தது.
_______
கெடா, Kuala Mudahவில் நேற்று மாலை பெய்த தொடர் கனமழையால் சுமார் 11 இட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
வெள்ளம் வடிந்து வருகின்ற போதிலும், நேற்றிரவு வாக்கில் மழை தூரல் இருந்து கொண்டு தான் இருந்ததாக அம்மாநில பொது தற்காப்பு அதிகாரி தெரிவித்தார்.
அந்த வெள்ளத்தால் சுமார் 145 பேர் பதிக்கப்பட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather