← Back to list
குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம்!
Nov 27, 2020
நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை மீண்டும் நான்கு இலக்கத்திற்கு உயர்ந்துள்ளது.
புதிதாக ஆயிரத்து நூற்று 9 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் இருவர் அக்கிருமித் தொற்றுக்கு பலியானதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ளது.
புதிய சம்பவங்களைக் காட்டிலும் அதிகமாக ஆயிரத்து 148 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
Covid-19னுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், அதனைப் பெற அமெரிக்காவின் மிகப் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான Pfizerருடன் அரசாங்கம் பூர்வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 20 விழுக்காட்டினருக்குப் போதுமான தடுப்பூசிகள் இருக்கும் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார்.
அத்தடுப்பூசி மலேசியர்களுக்கு இலவசமாகும்; அந்நிய நாட்டவர்களுக்கு கட்டணம் உண்டு.
ஜொகூர், Batu Pahat, Tongkang Pecahவில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து டிசம்பர் 13 ஆம் தேதி வரை நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வருகிறது.
அப்பகுதியில் Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகி வருவதை அடுத்து அம்முடிவு எடுக்கப்பட்டதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
இதனிடையே சரவாக், கூச்சிங்கில் அமலில் இருந்த CMCO இன்றுடன் முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது.
மற்றொரு நிலவரத்தில், CMCO அமலில் உள்ள பகுதிகளில் அன்றாடச் சந்தைகள் செயல்படும் நேரத்தை மாலை 4 மணி வரை நீட்டிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை SOPக்களை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 308 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் சுவாசக் கவசம் அணியாதவர்கள்.
ஊழியர் சேமநிதி வாரியத்தின் i-Sinar திட்டம் குறித்த போலி செயலி குறித்து கவனமாக இருக்குமாறு EPF பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறது.
முதலாவது கணக்கில் இருந்து சந்தா பணத்தை மீட்பது தொடர்பான அலுவல்களைக் கையாள தாங்கள் மூன்றாம் தரப்பை நியமிக்கவில்லை என அது நினைவுறுத்தியது.
அதோடு தற்போதைக்கு பணத்தை மீட்க சந்தாதாரர்களின் விவரங்களைக் கோருவது மீதான எந்த செயலியும் உருவாக்கப்படவில்லை எனவும் EPF தெரிவித்தது.
Covid-19 பரவலால் வருமானம் பாதிக்கப்பட்டவர்கள் i-Sinar திட்டத்தின் கீழ் பத்தாயிரம் ரிங்கிட் வரை மீட்கலாம் என நிதியமைச்சு நேற்று அறிவித்திருந்தது.
அடுத்தாண்டு ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறும் பேரா, Gerik நாடாளுமன்றத் தொகுதி, சபா, Bugaya சட்ட மன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பிரச்சாரங்களின் போது மக்களை நேரடியாகச் சந்திக்க அனுமதியில்லை.
Covid-19 பரவலைக் கருத்தில் கொண்டு அத்தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
நெகிரி செம்பிலானில் அம்மாநில பொதுச் சேவைத் துறை ஊழியர்கள் அனைவருக்கும் அரை மாதச் சம்பளம் அல்லது குறைந்தபட்சம் ஆயிரம் ரிங்கிட் சிறப்பு உதவிநிதியாக வழங்கப்படவிருக்கிறது.
அதே சமயம், மாநில அரசு Covid-19 தடுப்பு நடவடிக்கைகளுக்காக 1 கோடி ரிங்கிட்டையும் ஒதுக்கியுள்ளது.
நாளை தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு RON95, RON97 பெட்ரோல் விலை மூன்று சென்னும் டீசல் விலை 4 சென்னும் அதிகரிக்கிறது.
அவ்வகையில் RON95 லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 67 சென்னுக்கும் RON97 ஒரு ரிங்கிட் 97 சென்னுக்கும் விற்கப்படும்.
டீசல் விலை ஒரு ரிங்கிட் 85 சென்னாகும்.
சிலாங்கூரில் சுற்றுச் சூழல் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 20 ஆயிரம் ரிங்கிட் வரை சன்மானம் வழங்க அம்மாநில அரசு முன் வந்துள்ளது.
அதன் வழி குற்றவாளிகளை அடையாளம் காண்பதோடு சுற்றுச் சூழல் சார்ந்த குற்றச்செயல்களைத் துடைத்தொழிப்பதில் மக்களின் பங்கேற்பையும் மேம்படுத்த முடியும் என அது கூறியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather