← Back to list
ஒத்துழைத்த MP-களை மாமன்னர் பாராட்டினார்!
Nov 27, 2020
2021 பட்ஜெட்டை கொள்கையளவில் நிறைவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய ஒத்துழைப்பை, மாமன்னர் பாராட்டியிருக்கின்றார்.
இவ்வேளையில், மாமன்னர் வலியுறுத்தியது போல, அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, மக்கள் நலன் கருதி பட்ஜெட்டுக்கு ஆதரவு அளித்த MPகளுக்கு பிரதமர் Tan Sri Muhyiddin Yassin நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ஏறக்குறைய 3 வாரங்கள் விவாதங்களுக்குப் பிறகு, சில மாற்றங்கள் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பின் வாயிலாக வரவு செலவு அறிக்கை கொள்கையளவில் நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இவ்வேளையில், எண்ணிக்கை அடிப்படையிலான வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவிக்காமல் பெரும்பாலான எதிர்கட்சி MP-கள் நேற்று அமைதி காத்தது குறித்து நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் Datuk Seri Anwar Ibrahim விளக்கமளித்துள்ளார்.
"kerana keputusan itu memberi respons yang sedikit positif tentang kebajikan rakyat, Saya dapati agak sukar untuk kita memberikan penolakan keras kepada peringkat awal, Saya telah meminta rakan-rakan saya bersetuju dengan pandangan saya supaya untuk pusingan pertama ini, kita bagi laluan"
வரும் திங்கட்கிழமை செயற்குழு அளவிலான விவாதங்களை எதிர்கட்சி மீண்டும் தொடங்கும் என்றும் அவர் சொன்னார்.
விரிவான தகவல் அடுத்த வாரம்!
i-Sinar திட்டத்தின் கீழ், ஊழியர் சேமநிதி வாரியம் EPFபின் முதல் கணக்கில் இருந்து பணத்தை மீட்க்கும் திட்டத்திற்கு டிசம்பர் மாத மத்தியில் இருந்து சந்தாதாரர்கள் விண்ணப்பிக்க தொடங்கலாம்.
விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாதத்திற்கு பிறகு, அவர்களுக்கு அத்தொகை வழங்கப்படும் என EPF கூறியுள்ளது.
அதன் தொடர்பான முழு விவரங்கள் அடுத்த வாரத் தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என அவ்வாரியம் அறிக்கை வழி தெரிவித்தது.
COVID-19 : அதிகமானோர் குணமடைந்தனர்!
நாட்டில் புதிதாக பதிவான தொள்ளாயிரத்து 35 COVID-19 சம்பவங்களில், 326 சம்பவங்கள் சபாவை உட்படுத்தியிருக்கின்றன.
161 சம்பவங்களுடன் சிலாங்கூர் 2ஆம் இடத்தில் உள்ள நிலையில், நெகிரி செம்பிலான் 158 சம்பவங்களை பதிவுச் செய்துள்ளது.
இன்னும் 11 ஆயிரத்து 348 பேர் அத்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Johor, Kuala Lumpur, Penang, Kedah மற்றும் Kelantan-னை உட்படுத்தி 6 புதிய clusterகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவ்வேளையில், இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் ஈராயிரத்து 555 பேர் அத்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
யாரும் வேலி ஏறி குதிக்கவில்லை!
சிலாங்கூர் கிள்ளான் Meruவில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள Top Glove தொழிற்சாலை விடுதியில் இருந்து தப்பிக்க, எந்த தொழிலாளர்களும், வேலி ஏறி குதிக்கவில்லை என காவல் துறை தெளிவுப்படுத்தியிருக்கின்றது.
அதன் தொடர்பில் பரவியிருக்கும் புகைப்படம், அத்தொழிற்சாலையில் EMCO அமுலுக்கு வந்த முதல் நாள் எடுக்கப்பட்டதாகும்.
அன்றைய நாள் அமுலாக்க அதிகாரிகள் அத்தொழிற்சாலையில் முள்வேலிகளை அமைத்துக் கொண்டிருந்ததால், படத்தில் காணப்படும் தொழிலாளி, தொழிற்சாலைக்குள் நுழையவே வேலி மீது ஏறியதாக காவல் துறை விளக்கமளித்தது.
அப்படத்தில் காணப்பட்ட மேலும் சில தொழிலாளிகளுடன் சேர்த்து அனைவருமே தொடர்ந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அத்துறை கூறியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather