← Back to list
மீண்டும் மூன்றிலக்கத்திற்கு இறங்கியது!
Nov 25, 2020
நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை மூன்றிலகத்திற்குக் குறைந்துள்ளது.
புதிதாக தொளாயிரத்து 70 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இம்முறை நெகிரி செம்பிலானில் மிக அதிகமாக 318 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அடுத்து சபாவில் 293 சம்பவங்களும் சிலாங்கூரில் 115 சம்பவங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் நால்வர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர்.
அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 345 ஆக உயர்த்துள்ளது.
சிலாங்கூரிலும் KLலிலும் நடப்பில் உள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடித்துக் கொள்ளப்படுமா, நீட்டிக்கப்படுமா என்பது டிசம்பரில் அறிவிக்கப்படும்.
CMCOவின் இறுதி வாரத்தில் அது அறிவிக்கப்படும்.
அனைத்தும் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரிலேயே இருக்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் இரு பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகிறது.
கெடா, கூலிமில் Sungai Seluang துணை மாவட்டத்திலும், சபா, Tuaranனில் Taman Telipuk Riaவிலும் வெள்ளிக்கிழமை தொடங்கி டிசம்பர் 10 ஆம் தேதி வரை EMCO அமலுக்கு வருகிறது.
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகியவற்றை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 313 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரும்பாலோருக்கு சுவாசக் கவசம் அணியாததற்கும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காததற்கும் தண்டம் விதிக்கப்பட்டது.
தேசிய உயர்க்கல்வி நிதிக்கழகம் PTPTNனிடம் இருந்து கடனுதவி பெற்ற மாணவர்களுக்கு moratorium சலுகை மீண்டும் நீட்டிக்கப்படலாம்.
உயக்கல்வி அமைச்சர் Datuk Dr Noraini Ahmad அதனைத் தெரிவித்தார்.
அது குறித்து நிதியமைச்சு உள்பட பல தரப்புகளுடன் தாம் விவாதித்து வருவதாக அவர் சொன்னார்.
“Kementerian telah mengambil tindakan awal berbincang degnan agensi berkaitan termasuk MOF. Perkara ini akan dibawa untuk pertimbangan pihak kerajaan selanjutnya.”
அடுத்தாண்டின் முதலாவது காலாண்டில் பெறப்படும் என எதிர்பார்க்கப்படும் Covid-19 தடுப்பூசி விநியோகம் 12 வயதுக்குக் கீழ்பட்ட சிறார்களை உட்படுத்தியிருக்கவில்லை.
12 வயதுக்குக் கீழ்பட்ட சிறார்களுக்கான தடுப்பூசி ஏதும் இன்னும் சோதனை செய்யப்படவில்லை என அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு மக்களவையில் தெரிவித்தது.
கிளந்தான் காவல் துறை இம்மாதம் 9 ஆம் தேதியில் இருந்து நேற்று வரை அம்மாநிலத்துக்குள் நுழைய முயன்ற சுமார் 600 வாகனங்களைத் திருப்பி அனுப்பியுள்ளது.
மாநிலம் விட்டு மாநிலம் கடக்க காவல் துறையின் அனுமதி கடிதம் இல்லாததால் அவ்வாறு செய்யப்பட்டது.
திரங்கானுவில் ஆடவர் ஒருவருக்கு 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெர்மிட் அனுமதி இல்லாத அந்நிய நாட்டவர்களை தமது கட்டுமானத் தளத்தில் வேலை செய்ய அனுமதித்ததற்காக அவருக்கு அத்தொகை விதிக்கப்பட்டது.
மலேசிய-தாய்லாந்து எல்லையில் பொது தற்காப்பு நடவடிக்கை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் இருவர் தாக்கப்பட்டது தொடர்பில் மேலும் இரு தாய்லாந்து நாட்டவர்கள் பிடிபட்டுள்ளனர்.
அவர்களையும் சேர்த்து இதுவரை அந்த அண்டை நாட்டைச் சேர்ந்த எண்மர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather