Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

முதல் முறையாக ஈராயிரத்தைத் தாண்டியது எண்ணிக்கை!

Nov 24, 2020


நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை ஈராயிரத்தைத் தாண்டியுள்ளது.

ஒரே நாளில் மிக அதிகமான எண்ணிக்கையாக புதிதாக ஈராயிரத்து 188 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் மிக அதிகமாக ஆயிரத்து 623 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சபா, பேரா, Putrajayaவில் கணிசமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் நால்வர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாகியுள்ளதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 341 ஆக அதிகரித்துள்ளது.

வேலையிடங்கள் குறிப்பாக கட்டுமானத் தளங்களில் அந்நிய நாட்டவர்களை  உட்படுத்திய Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அரசாங்கம் கடுமையான ஒன்றாகக் கருதுகிறது. 

அதன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆள்பலத்துறை அமைச்சு தெரிவித்தது.  

நேற்று நாட்டில் பதிவான ஆயிரத்து 884 சம்பவங்களில் ஆயிரத்து 64 சம்பவங்கள் சிலாங்கூர், கிள்ளான், Meruவில் தொழிற்சாலைப் பகுதியை உட்படுத்திய Teratai clusterரில் பதிவானது குறிப்பிடத்தக்கது.

சபாவில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லுவோர், அம்மாநிலத்தில் இருந்து புறப்பட மூன்று நாட்களுக்கு முன் Covid-19னுக்கான மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது போதுமானது என சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது.

பரிசோதனையின் போது அக்கிருமித் தொற்று இருப்பது தெரிய வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் சபாவை விட்டு வெளியேற அனுமதியில்லை.

அதே சமயம் அக்கிருமித் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டவர்கள் இரு வார கட்டாய தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சு விளக்கியது.

பேராவில், Covid-19 நோயாளி ஒருவரை மருத்துவமனைக்கு அனுப்பிய பின் மரணமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு அக்கிருமித் தொற்று இல்லை.

அவருக்கு வேறு சில உடல் உபாதைகள் இருந்துள்ளன.

ஆயினும் அவரது மரணத்திற்கானக் காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுவதாக சுகாதார தலைமை இயக்குனர் தெரிவித்தார்.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகியவற்றை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 329 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர் பொது இடங்களில் சுவாசக் கவசத்தை அணியாதவர்கள்.

தேசிய சேவைப் பயிற்சித் திட்டம் PLKNனை மீண்டும் நடத்துமாறு தாம் அமைச்சரவையில் பரிந்துரைக்கவிருப்பதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்திருக்கிறார்.

“ Ia juga bersesuaian dengan Perintah Menteri-Menteri Kerajaan Persekutuan Tahun 2020 yang meletak semula Akta Latihan Khidmat Negara 628 di bawah Kementerian Pertahanan"

அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற அதன் தொடர்பில் அமைச்சு செயல் அறிக்கை அல்லது மகஜர் ஒன்றைத் தயார் செய்யும் என அவர் சொன்னார். 

மலேசிய-தாய்லாந்து எல்லையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொது நடவடிக்கைக் குழு வீரர்கள் இருவரைத் தாக்கியதில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் எழுவரை மலேசிய-தாய்லாந்து காவல் துறைகள் தேசி வருவரதாக பெர்லிஸ் மாநில காவல் துறைத் தலைவர் தெரிவித்தா.

இன்று காலை நிகழ்ந்த அச்சம்பவத்தில் பொது நடவடிக்கைக் குழு வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

மற்றொருவர் படுகாயமடைந்தார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather