← Back to list
பணத்தை மீட்கும் சலுகை விரிவுபடுத்தப்படுகிறது!
Nov 26, 2020
நாட்டில் தொடச்சியாக இரண்டாவது நாளாக புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை மூன்றிலக்கமாக உள்ளது.
புதிதாக 935 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
சபாவில் மிக அதிகமாக 326 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடுத்து அதிகமாக சிலாங்கூரில் 161 சம்பவங்களும் நெகிரி செம்பிலானில் 158 சம்பவங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் நால்வர் அக்கிருமித் தொற்றுக்குப் பலியாயினர்.
அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 348 ஆக அதிகரித்துள்ளது.
Covid-19 பரவலால் வருமானம் பாதிக்கப்பட்டவர்கள், ஊழியர் சேமநிதி வாரியம் EPFவின் முதலாவது கணக்கில் இருந்து பணத்தை மீட்கும் சலுகையை அரசாங்கம் தற்போது விரிவுபடுத்தியுள்ளது.
அதன் வழி சுமார் 80 லட்சம் சந்தாதாரர்கள் 10,000 ரிங்கிட் வரை மீட்க அனுமதிப்படுகிறது.
மக்களவையில் 2021 வரவு செலவு அறிக்கை விவாதங்களை முடித்து வைத்து நிதி அமைச்சர் அதனை அறிவித்தார்.
இவ்வேளையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2021 வரவு செலவு அறிக்கை இன்று மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டது.
முன் வரிசைப் பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு உதவிநிதியாக ஒரே தடவையாக 300 ரிங்கிட் வழங்க அரசாங்கம் இணங்கியுள்ளது.
இதற்கு முன் சுகாதார அமைச்சின் முன் வரிசைப் பணியாளர்களுக்கு மட்டுமே 500 ரிங்கிட் கொடுக்கப்பட்டது.
சபா மாநில அரசு மத்திய அரசாங்கத்திடம் இருந்து கூடுதலாக 5 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது.
அம்மாநிலத்தில் Covid-19 நிலவரத்தைக் கையாள அந்த கூடுதல் ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஜொகூரில் குறைந்த வருமானம் ஈட்டும் B40 தரப்பினருக்கு ஒரே தடவையாக 500 ரிங்கிட் வரை வழங்கப்படவிருக்கிறது.
சமூக நலத்துறையின் e-Kasih உதவி பெறுவோர், பொது சந்தை வணிகர்கள், இரவுச் சந்தை வணிகர்கள், டெக்சி ஓட்டுனர்கள், பள்ளிப் பேருந்துச் சேவை நடத்துனர்கள், e-hailing ஓட்டுனர்கள் மற்றும் உணவி விநியோகம் செய்வோர் அந்த உதவியை பெறுவர்.
அதே சமயம், அம்மாநிலத்தைச் சேர்ந்த பட்டதாரி மாணவர்கள், மூவாயிரத்தில் இருந்து ஏழாயிரம் ரிங்கிட் வரை மாதம் வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களும் அந்த உதவிநிதி வழங்கப்படவிருக்கிறது.
இதனிடையே ஜோகூரில் அம்மாநில பொதுச் சேவைத்துறையினர் சிறப்பு உதவிநிதியாக அரை மாதச் சம்பளம் அல்லது குறைந்தபட்சம் ஆயிரம் ரிங்கிட் பெறவிருக்கின்றனர்.
அத்தொகை இவ்வாண்டு இறுதிக்குள் வழங்கப்படும்.
Covid-19னுக்கான SOPக்களை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 243 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் சுவாசக் கவசம் அணியாதவர்கள்; தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள்.
ஆகக் கடைசி நிலவரப்படி நாட்டில் நான்கு மாநிலங்களில் துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய தொளாயிரத்து 10க்குக் குறைந்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather