Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

e-hailing தொழிலாளர்களுக்கான உதவிகள் ஆராயப்படும்!

Nov 25, 2020


COVID-19 சீற்றத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள e-hailing துறைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு எண்ணெய்க்கான உதவித் தொகை, நிதி உதவி ஆகியவற்றை  வழங்குவதுப் பற்றி அரசாங்கம் ஆராயும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதன் தொடர்பில், சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் கலந்தாலோசிக்கப்படும் என Tan Sri Muhyiddin Yassin தெரிவித்துள்ளார்.

மற்றொரு நிலவரத்தில், பிரதமர் Tan Sri Muhyiddin Yassinனின் தலைமைத்துவத்திற்கு, தேசிய முன்னணியைச் சேர்ந்த அமைச்சர்களும், துணை அமைச்சர்களும் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

COVID-19 பெருந்தொற்றில் இருந்து நாட்டை மீட்டெடுக்க, நிலையான அரசியல் தேவைப்படுவதாக கூறி, தேசிய முன்னணியைச் சேர்ந்த அந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒருசேர கருத்து முன்வைத்துள்ளனர்.

2021 வரவு செலவு அறிக்கையை MPகள் ஆதரித்து அதனை அங்கீகரிக்க வேண்டியதும் அவசியம் என்பதை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

என்றாலும், கொரோனாப் பரவலில் இருந்து நாடு ஓரளவுக்கு மீண்டப் பிறகு, நிலையான அரசாங்கத்தை அமைப்பதில் மக்களின் முடிவை தெரிந்துக் கொள்ள பொதுத் தேர்தல் விரைந்து நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த MPக்கள் கருதுகின்றனர்.

ஏறக்குறைய 3 வாரங்களாக மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் அடுத்தாண்டுக்கான பட்ஜெட் நாளை வாக்கெடுப்புக்கு வருகிறது.

வேலையிடங்களில் அதிகம் பரவும் COVID-19!

வேலையிடங்களில் பரவும் COVID-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொழிலாளர்கள் SOP-களை முறையாக பின்பற்றுவதை முதலாளிகள் உறுதிச் செய்யுமாறு, சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும், வேலையிடங்களை உட்படுத்திய COVID-19 clusterகள் எண்ணிக்கை 119ஆக உயர்ந்துள்ளதாக, சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்துள்ளார்.

அவற்றில், 36 clusterகள் முடிவுக்கு வந்துள்ளன; எஞ்சிய 83 clusterகளின் தீவிரம் இன்னும் குறையவில்லை என்றாரவர்.

இதனை கருத்தில் கொண்டு முதலாளிகள் உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள் என தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார்.

இவ்வேளையில், நாட்டில் ஆக அதிகமாக நேற்று ஒரே நாளில் ஈராயிரத்து 188 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதில் ஆயிரத்து 623 சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவானவை.

அத்தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரு நாளில் மட்டும், ஆயிரத்து 673 பேர் அத்தொற்றில் இருந்து முழுமையாக மீண்டனர்.

இன்னும் 14 ஆயிரத்து 300க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மற்றொரு நிலவரத்தில், சபாவில் மட்டும் நேற்று 833 பேர் COVID-19 தொற்றில் இருந்து குணமடைந்தனர்.

இதையடுத்து அம்மாநிலத்தில் பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 721ஆகப் பதிவாகியிருக்கின்றது.

Air Selangor: 27 இடங்களில் தண்ணீர் விநியோகம் பாதிப்பு!

Kuala Langat மற்றும் செப்பாங்கை உட்படுத்தி, ஏறக்குறைய 27 இடங்களில் அட்டவணையிடப்பட்ட தண்ணீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.

நீர் விநியோக குழாய்களில் பரமாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதே காரணம் என Air Selangor தெரிவித்தது.

இன்று மாலை ஐந்தரை மணி வாக்கில், பாதிக்கப்பட்ட இடங்களில் நீர் விநியோகம் முழுமையாக வழக்க நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய - தாய்லாந்து எல்லை: அறுவர் கைது!

மலேசிய – தாய்லாந்து எல்லையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய மேலும் ஏழு பேர் தேடப்படுகின்றனர்.

அத்துப்பாக்கிச் சூட்டில் பொது தற்காப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த மலேசிய வீரர் ஒருவர் உயிரிழந்த வேளை, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதுவரை 6 பேர் அச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather