Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சிலாங்கூரில் மிக அதிகமான சம்பவங்கள்!

Nov 23, 2020


Covid-19 நாட்டில் பரவத் தொடங்கியதில் இருந்து மிக உயரிய எண்ணிக்கையாக புதிதாக ஆயிரத்து 884 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சிலாங்கூரில் மிக அதிகமாக ஆயிரத்து 203 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடுத்து சபாவில் அதிகமாக 289 சம்பவங்களும், KLலில் 196 சம்பவங்களும் நெகிரி செம்பிலானில் 41 சம்பவங்களும் பதிவாகின.

மேலும் இருவர் அக்கிருமித் தொற்றுக்கு பலியானதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 337 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக நான்கு clusterகள் கண்டறியப்பட்டுள்ளன.

நெகிரி செம்பிலானில் சிரம்பான் சிறைச் சாலையிலும் அதன் kuartersசிலும் நாளை முதல் டிசம்பர் 7 ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகிறது.

பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அதனை அறிவித்தார்.

அப்பகுதிகளில் ஈராயிரத்துக்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர்.

இதனிடையே சிலாங்கூர் செப்பாங், Bandar Baru Salak Tinggiயில் Medan 88 பகுதியில் புதன்கிழமையுடன் EMCO முடித்துக் கொள்ளப்படுகிறது.

அங்கு Covid-19 நிலவரம் கட்டுப்பாட்டிலேயே உள்ளதாக அமைச்சர் சொன்னார்.  

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள பகுதிகளில் இருக்கும் உணவகங்கள், உணவுக் கடைகள் உள்ளிட்ட வர்த்தகத் தளங்கள் நள்ளிரவு வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

அது உடனடியாக அமலுக்கு வருகிறது. 

CMCO மற்றும் EMCOவை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 800க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் SOPயைப் பின்பற்றாததற்காக 747 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டது.

இம்மாதம் 10 ஆம் தேதி JBயில் இருந்து Tumpat சென்ற Ekspress Timuran ரயிலில் பயணித்த அறுவர் Covid-19 பரிசோதனை செய்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

T6 பெட்டியில் சென்ற அந்த அறுவரும் குறிப்பிட்ட டிக்கெட் எண்ணைக் கொண்டுள்ளனர்.

Covid-19 பீடித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நபருடன் அந்த அறுவரும் நெருங்கிய தொடர்பில் இருந்ததே அதற்குக் காரணம்.

Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகப் பதிவாகி வந்தால், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இவ்வாண்டு இறுதி வரை நீட்டிக்கப்படலாம்.

அது குறித்து ஆய்வு செய்யப்படும் என பிரதமர் துறை மக்களவையில் தெரிவித்தது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather