← Back to list
மீண்டும் ஆயிரத்தை தாண்டிய COVID-19 சம்பவங்கள்!
Nov 19, 2020
நாட்டில் புதிதாக ஆயிரத்து 290 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஆக அதிகமாக சபாவில் 660 சம்பவங்கள் பதிவாகியுள்ள வேளை, சிலாங்கூரில் 407 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஆகக் கடைசியாக நால்வர் அத்தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து மரண எண்ணிக்கை 326ஆக அதிகரித்துள்ளது.
838 அத்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.
இன்னும் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
200-க்கும் அதிகமனோர் கைது!
COVID-19 மீதான SOPகளை மீறியதற்காக நாடு முழுவதும் ஆகக் கடைசியாக ஏறக்குறைய 290 பேர் கைது செய்ப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஆக அதிகமாக 108 பேர் சுவாசக் கவசம் அணியாததற்காக பிடிப்பட்டதாக, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.
அனுமதி இன்றி மாநிலம் மற்றும் மாவட்டம் கடந்துப் பயணித்த குற்றத்திற்காக 38 பேர் கைதாகியுள்ளனர்.
COVAX : மலேசியா முன்பணம் செலுத்தும்!
அனைத்துலக COVID-19 தடுப்பூசி மேம்பாட்டு திட்டம் COVAXசில் பங்கேற்க மலேசியா 94 மில்லியன் ரிங்கிட் முன்பணம் செலுத்தும் என, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சு தெரிவித்துள்ளது.
தடுப்பூசிகள் தயாரானதும் அதன் கையிருப்பை மலேசியா விரைந்து பெறுவதை அந்த தொகை உறுதி செய்யும் என அமைச்சு கூறியது.
தற்போது அதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கான தேதி குறித்து அதிகாரப்பூர்வ தரப்புகள் கலந்தாலோசித்து வருவதாகவும் அமைச்சு தெரிவித்தது.
98% விழுக்காட்டு விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன!
இலக்கு வைக்கப்பட்டோருக்கான moratorium சலுகை தொடர்பில் இதுவரை 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 98 விழுக்காடு அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சு கூறியது.
அதில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினருக்கு moratorium சலுகையை நீட்டிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏறக்குறைய 60 விழுக்காட்டினர், வங்கிக்கான தங்களது மாதந்திர தவணைப் பணத்தை குறைத்து செலுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றிருப்பதாக அமைச்சு கூறியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather