← Back to list
MySejahtera செயலி பாதுகாப்பானதே!
Nov 19, 2020
சபா, Batu Sapiயில் அறிவிக்கப்பட்டுள்ள அவரச காலத்தால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது.
பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அவ்வாறு உத்தரவாதம் அளித்திருக்கிறார்.
அங்கு ஊரடங்கு இல்லை; ராணுவக் காவலும் இல்லை என அவர் சொன்னார்.
தர செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் வழக்கம் போல் இருக்கும்.
Batu Sapi நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலைத் தாமதப்படுத்தவே அந்த அவசர நிலை.
Covid-19 தணிந்ததும், அவ்விடைத் தேர்தல் நடத்தப்படும் என Muhyiddin கூறினார்.
“Saya bagi pihak PN ingin memberikan jaminan dapat melaksanakan hak demokrasi masing-masing dengan selamat dan tenteram”
Batu Sapi இடைத் தேர்தலை டிசம்பர் 5 ஆம் தேதி நடத்த முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
சபா, Batu Sapiயில் அவசர காலத்தை அறிவித்துள்ள மாமன்னரின் முடிவை சுகாதார அமைச்சு வரவேற்றுள்ளது.
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கருதி, Batu Sapi நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலை ஒத்தி வைக்க ஏதுவாக அந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
Covid-19 பரவலுக்கு மத்தியில் முடிந்தால் இடைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதே சிறந்தது என்பதைத் தாங்கள் வலியுறுத்தி வந்ததையும் சுகாதாரத் தலைமை இயக்குனர் Tan Sri Dr Noor Hisham Abdullah சுட்டிக் காட்டினார்.
“Syor KKM dari dulu lagi ialah kalau boleh, elakkan pilihanraya. Selepas PRN Sabah, contohnya, kita lihat ada peningkatan kes. Jadi kalau boleh, kita cegah satu lagi pilihanraya supaya dapat mencegah penularan COvid dalam negara kita”
கிள்ளான் பள்ளத்தாக்கில் Covid-19 நிலவரத்தைக் கையாள சுகாதார அமைச்சு ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாட்டு மையத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அம்மையத்திற்கு சிலாங்கூர் சுகாதார இயக்குனர் தலைமையேற்பார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் Covid-19 நோயாளிக்கு சிகிச்சையளிக்க ஏதுவாக கட்டில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
MySejahtera செயலில் சுய விவரங்களைப் பதிவு செய்வது பாதுகாப்பானதே.
அச்செயலி அனைத்துலக தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதால், சுய விவரங்களைத் தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்த வாய்ப்பில்லை என சுகாதார அமைச்சு விளக்கியது.
அவ்விவரங்களை அமைச்சைத் தவிர்த்து, தேசிய இணையப் பாதுகாப்பு மன்றமும் தேசிய பாதுகாப்பு மன்றமும் கண்காணித்து வருவதையும் அது சுட்டிக் காட்டியது.
பேராவில் Covid-19னால் தாக்கத்தை எதிர்நோக்கியுள்ள சிறு வணிகர்களுக்கும் அங்காடி வியாபாரிகளுக்கும் இரண்டாம் முறையாக 500 ரிங்கிட் ‘one-off’ உதவிநிதி வழங்கப்படுகிறது.
அம்மாநில ஊராட்சி மன்றத்திற்குச் சொந்தமான இடங்களில் வணிகம் செய்வோருக்கு இம்மாதம் வாடகை விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
சபா, Kota Kinabaluவில் மருத்துவமனையொன்றில் இருந்து தப்பியோடிய Covid-19 நோயாளியை காவல் துறை தேடி வருகிறது.
அந்நபர் கடந்த திங்கட்கிழமை தப்பியோடியதாக நம்பப்படுகிறது.
நாட்டின் சில பகுதிகளில் அதிகாலையிலும் மாலையிலும் பெய்யும் இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை அடுத்த மாத இறுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்குக் கரை மாநிலங்கள், சபா, சரவாக் ஆகியவற்றில் அந்நிலை காணப்படும் என வானிலை ஆய்வுத்துறை கூறியிருக்கிறது.
திடீர் வெள்ளமும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அது தெரிவித்தது.
பேரா,ஈப்போவில் உள்ள Lahatட்டில் அடை மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 29 பேர் துயர் துடைப்பு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather