Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

வேலையிடங்களில் அதிகமான சம்பவங்கள்!

Nov 18, 2020


கிள்ளான் பள்ளத்தாக்கில் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு வேலையிடங்களில் பதிவான அதிகமான சம்பவங்களே காரணம்.

தற்போது நாட்டில் ஆக்ககரமாக உள்ள 162 clusterகளில் 72, வேலையிடங்களை உட்படுத்தியவை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிலாங்கூர், KL, Putrajaya ஆகியவற்றில் அதிகமான மக்களும் தொழிலாளர்களும் இருப்பதால்தான் அதிகமான clusterகளும் அடையாளம் காணப்படுவதாக அது கூறியது. 

கட்டுமானத் தளமொன்றில் வேலை செய்யும் அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் கையில் இளஞ்சிவப்பு கைவளையம் அணிந்திருந்த புகைப்படம் வெளியானது தொடர்பில் சுகாதார அமைச்சு விளக்கமளித்துள்ளது.

அவர்கள் இன்னமும் சம்பந்தப்பட்ட கட்டுமானத் தளத்தில்தான் வேலை செய்கின்றனர்.

அத்தொழிலாளர்கள் கண்காணிப்புக்கான மருத்துவ பரிசோதனை செய்து கொண்டவர்கள்.

Covid-19 பீடித்திருந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அல்ல என சுகாதாரத் தலைமை இயக்குனர் தெளிவுபடுத்தினார்.

எனவேதான் அவர்கள் கட்டுமானத் தளத்தில் மட்டும் நடமாட அனுமதியளிக்கப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.

கிளந்தானில் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

ஆகக் கடைசியாக அம்மாநிலத்தில் 19 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதனை அடுத்து அம்மாநிலத்தில் இதுவரை மொத்தம் 237 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

அவர்களில் 50 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திரங்கானுவில் Marang சுகாதார கிளினிக் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அங்குச் சென்ற நோயாளி ஒருவருக்கு Covid-19 தொற்று உறுதிச் செய்யப்பட்டதால், கிருமி நாசினி தெளித்து துப்புரவு செய்ய ஏதுவாக அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர், செப்பாங் Bandar Baru Salak Tinggiயில் Medan 88 பகுதியில் இருந்து வெளியேறியவர்களில் இதுவரை 40 பேர் தத்தம் குடியிருப்புகளுக்குத் திரும்பி விட்டனர்.

அப்பகுதியில் சிலருக்கு Covid-19 பீடித்திருப்பதை அடுத்து குடியிருப்புவாசிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அதோடு அங்கு தற்போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திரங்கானு, Setiuவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக அம்மாவட்டத்தில் இரு துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 44 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நெகிரி செம்பிலான், சிரம்பானில் பழைய தோழி எனக் கூறி தொலைபேசி வழி நிகழ்ந்த மோசடியால் பணி ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் இரண்டரை லட்சம் ரிங்கிட்டைப் பறி கொடுத்துள்ளார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather