← Back to list
Covid-19-னிலிருந்து 996 பேர் மீண்டனர்!
Nov 12, 2020
நாட்டில் இன்று Covid-19 தொற்றுக்கு ஆளானவர்களைக் காட்டிலும் அதிலிருந்து மீண்டும் வந்தோரின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியுள்ளது.
996 பேர் மீண்டு வந்துள்ள வேளை, புதிதாக 919 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றுள் 916 சம்பவங்கள் உள்நாட்டில் பரவையவை.
______
Covid-19-னுக்கான தடுப்பூசி பாதுகாப்பானதாக இருப்பது உறுதிச் செய்யப்பட்டதும், அதனைப் பயன்படுத்த ஏதுவான திட்டத்தை அரசாங்கம் தயார் செய்துள்ளது!
இத்திட்டத்தின் அடிப்படையில் எளிதில் அத்தொற்றுக்கு ஆளாகக் கூடிய முதியவர்களுக்கும் முன்வரிசைப் பணியாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு, கட்டங்க்கட்டமாக அத்தடுப்பூசி போடப்படும் என சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Adham Baba இன்று மக்களவையில் தெரிவித்தார்.
உலகளாவிய நிலையில் அத்தடுப்பூசிக்கான தேவை அதிகம் இருக்கும் என்பதால், அதன் கையிருப்பு குறித்த அச்சம் நிலவலாம் என்றும் அமைச்சர் மேலும் சொன்னார்.
______
Covid-19-னால் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது, பள்ளி விடுமுறை என்றோ அல்லது கற்றல் கற்பித்தல் நடக்காது என்றோ அர்த்தமாகாது!
இணையம் உள்ளிட்ட இதர வழிகளில் போதனா முறைகள் நடந்தேற வேண்டும் என கல்வி தலைமை இயக்குனர் Datuk Dr Habibah Abdul Rahim திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
குறிப்பாக பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
______
ஒரு வாகனத்தில் ஒருவர் எந்த இருக்கையில் அமர வேண்டும் என்ற புதிய தர செயல்பாட்டு நடைமுறையை அரசாங்கம் வெளியிட்டிருப்பதாக, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலை தேசிய பாதுகாப்பு மன்றம் மறுத்துள்ளது.
இப்போதைக்கு ஒரே வீட்டைச் சேர்ந்த இருவர் மட்டுமே ஒரு வாகனத்தில் பயணிக்க முடியும் என்பதை மட்டுமே தமது தரப்பு வலியுறுத்தி வருவதை அம்மன்றம் சுட்டிக் காட்டியது.
_____
பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, துயர் துடைப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 381றிலிருந்து 132க்குக் குறைந்துள்ளது.
மூன்று நிவாரண மையங்கள் மூடப்பட்டிருப்பதாக மாநில பேரிடத் நிர்வாக செயற்குழு தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather