Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தீபகற்பத்தில் கொரோனாப் பரவலை கட்டுப்படுத்த முயற்சி!

Nov 12, 2020


தீபகற்பத்தில் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கிலும், நெகிரி செம்பிலானிலும் COVID-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது.

சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah அதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஆகக் கடைசியாகப் பதிவான 822 COVID-19 சம்பவங்களில் 400க்கும் அதிகமானவை கிள்ளான் பள்ளத்தாக்கையும், நெகிரி செம்பிலானையும் உட்படுத்தியிருக்கின்றன.

எங்கு அமர வேண்டும் என்ற நிபந்தனை இல்லை!

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO-வுக்கான இக்காலக் கட்டத்தில் வாகனங்களில் பயணிப்பவர்கள் முன் – பின் ஆகிய இரு இருக்கைகளில் எங்கு அமர வேண்டும் என எந்த விதிமுறையும் நிர்ணயிக்கப்படவில்லை.

எனினும், காரில் ஒரு நேரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob மீண்டும் தெளிவுப்படுத்தினார்.

காரில் தனது பக்கத்தில் ஒருவர் அமர்ந்திருந்ததால், தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக கூறி ஆடவர் ஒருவர் முகநூலில் பதிவேற்றியுள்ள காணொளி குறித்து அவர் பேசினார்.

அக்காணொளி, மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் அதே வேளை PDRM-மின் தோற்றத்தை பாதிக்கும் நோக்கத்தில் இருப்பதாக கூறி, மலாக்கா காவல் துறை புகார் அளித்திருந்தது.

மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று!

இத்தாலியில், COVID-19 தொற்று எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியிருக்கின்றது.

இதையடுத்து அப்பெருந்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் ஒன்றாக இத்தாலி மாறியிருக்கின்றது.

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில், 32 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

தண்ணீர் விநியோகம் தொடர்ந்து சீரடைகிறது!

கிள்ளான் பள்ளத்தாக்கில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏறக்குறைய 76 விழுக்காடு அதாவது 977 இடங்களில் தண்ணீர் விநியோகம் முழுமையாக வழக்க நிலைக்கு திரும்பியுள்ளது.

எஞ்சிய 302 பகுதிகளுக்கான நீர் விநியோகத்தை சீரடைய வைக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக Air Selangor கூறுகின்றது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather