← Back to list
ஒரு காரில் இருவர் மட்டுமே பயணிக்க முடியும்!
Nov 11, 2020
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் உள்ள பகுதிகளில் தீபாவளியின் போது தரை வீடுகளில் ஒரு நேரத்தில் 20 பேர் வரை ஒன்றுக் கூடலாம் என்றாலும், காரில் ஒரு நேரத்தில் இருவர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர், பொது மக்களை நினைவுறுத்தியிருக்கின்றார்.
வாகனப் பயணங்களைப் பொறுத்த வரை, அந்த SOP-யில் மாற்றம் இல்லை என அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
இவ்வேளையில், COVID-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகி சிவப்பு மண்டலங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள், அடுத்த இரு வாரங்களில் பச்சை மண்டலங்களாக மாறினால், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வரப்படலாம்.
பெரும்பாலான சிவப்பு மண்டலப் பகுதிகள், கிள்ளான் பள்ளத்தாக்கு, நெகிரி செம்பிலான், பேரா, பினாங்கு ஆகியவற்றை உட்படுத்தியிருப்பதாகவும், அவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சுகாதார துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
மக்கள் அனைவரும் குறைந்தது இரு வாரங்களுக்கு வெளியில் அதிகம் நடமாடாமல் வீட்டிலேயே இருக்கும் பட்சத்தில், COVID-19 பெருதொற்றை முற்றாக கட்டுப்படுத்த முடியும் என Tan Sri Dr Noor Hisham Abdullah முன்னதாக கூறியிருந்தார்.
ஆகக் கடைசியாக நாட்டில் 869 கொரோனா சம்பவங்கள் பதிவான வேளை, அறுவர் அத்தொற்றினால் உயிரிழந்தனர்.
நீர் சுத்திகரிப்பு ஆலைகள் திறக்கப்பட்டன!
சிலாங்கூரில் நீர் மாசுபாடு காரணமாக நேற்று மூடப்பட்ட 4 நீர் சுத்திகரிப்பு ஆலைகளும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று பிற்பகல் மூன்று மணி தொடங்கி கட்டம் கட்டமாக வழக்க நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக Air Selangor தெரிவித்துள்ளது.
அத்தண்ணீர் மாசுபாட்டிற்கு, சதிநாச வேலை காரணமாக இருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை என மாநில Menteri Besar கூறியுள்ளார்.
அண்மையில், தண்ணீர் மாசுபாட்டை ஏற்படுத்துவோருக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டதை அடுத்து, மாநில அரசாங்கத்தை பழிவாங்கும் நோக்கத்தில் இந்த ஆகக் கடைசி சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என Datuk Seri Aminuddin Shari The Star-ரிடம் தெரிவித்தார்.
செப்டம்பர் மாதத்தில் இருந்து இதுவரை தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகளை உட்படுத்தி நிகழ்ந்த ஆறாவது நீர் மாசுபாடு சம்பவம் இதுவாகும்.
Trump-பால் பொறுமை இழந்த கட்சியினர்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறி நீதிமன்றம் செல்லும் Donald Trump-பின் நடவடிக்கையால் , அவரின் குடியரசுக் கட்சியினரே பொறுமை இழந்து வருவதாகக் கூறப்படுகிறது.
தமது அக்குற்றச்சாட்டுக்கான தக்க ஆதாரங்களை அவர் முன் வைக்க வேண்டும்; இல்லையென்றால் மக்கள் அளித்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என கட்சியின் மூத்தத் தலைவர்கள் Trump-பை வலியுறுத்துதாகத் தெரிகிறது.
தம்மைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தொடர்ந்து கூறி வந்தாலும் , வலுவான ஆதாரம் எதனையும் Trump இன்னும் முன்வைக்வில்லை.
அமெரிக்காவில் 1992-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பு அதிபர் ஒருவர் தேர்தலில் தோல்வி கண்டிருப்பது இதுவே முதன்முறை.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather