← Back to list
2021 பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது!
Nov 06, 2020
மலேசியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த 2021ஆம் ஆண்டுக்கான நாட்டின் வரவு செலவு அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
பிரதமர் Tan Sri Muhyiddin Yassin தலைமையிலான Perikatan Nasional அரசாங்கத்தின் கீழ் முதன் முறையாக தாக்கல் செய்யப்படவுள்ள அந்த பட்ஜெட் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
குறிப்பாக COVID-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தையும், மக்கள் நலனையும் காக்கும் ஒட்டுமொத்த பட்ஜெட்டாக அது அமைய வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வேளையில், இன்றைய பட்ஜெட் சிறு மற்றும் நடுத்தர தொழில் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற இதர தொழில் துறைகளில் கவனம் செலுத்தக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்;
அதுவே தனது எதிர்பார்ப்பு என்கிறார், மலேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் MIER-ரின் தலைமை ஆய்வாளர் Dr Shankaran Nambiar.
மக்களுக்கு நேரடியாக உதவக் கூடிய திட்டங்கள் அதில் அறிவிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.
“from the time perspective I think that there are two things that should be looked at. There is the damage control that should be undertaken at this point and subsequently. The budget should seek to dampen the downswing, it should provide relief for the unemployed, for loss of income and there should be incentives that would encourage the building of the economy.”
இப்பெருந்தொற்றுக் காலத்தில் வேலை மற்றும் வருமானம் இழந்தவர்களுக்கு உதவும் அதே வேளை, நலிவடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான ஆக்ககர திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
மற்றொரு நிலவரத்தில், புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு COVID-19 தொற்றும் பட்சத்தில், அவர்கள் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பது ஆய்வின் வழி தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, இன்று தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை களைவதற்கான சிறப்பு சலுகைகளை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என, சுகாதார நிபுணர் இணைப் பேராசிரியர் Dr Amer Siddiq Amer Nordin பரிந்துரைத்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளாக சிகரெட்டுக்கான வரி உயர்த்தப்படவில்லை என்பதை குறிப்பிட்ட அவர், இன்றைய பட்ஜெட்டில் அவ்வரியை உயர்த்துவதற்கான அறிவிப்பு வரும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
2021 பட்ஜெட்டை, இன்று பிற்பகல் மூன்று மணிக்கு மேல் நிதியமைச்சர் Tengku Datuk Seri Zafrul Tengku Abdul Aziz நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கின்றார்.
பச்சை & சிவப்பு மண்டலங்களில் உள்ளவர்களுக்கு ஆலோசனை!
COVID-19 தொற்றுச் சம்பவங்கள் இல்லாத, பச்சை மண்டலங்களைச் சேர்ந்தவர்கள், அச்சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ள சிவப்பு மண்டலங்களைச் சேர்ந்தவர்களுடன் நெருக்காமாக இருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியிருக்கின்றது.
எனவே, இயன்றவரை, மாநில-மாவட்ட எல்லைகளை கடப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏறக்குறைய 60 முதல் 70 விழுக்காடு வரையிலான தொற்றுச் சம்பவங்கள் அறிகுறிகள் இன்றி பரவுவதை அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகக் கடைசியாக நாட்டில், ஆயிரத்து ஒன்பது பேர் COVID-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இன்னும் 10 ஆயிரத்து 503 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தீபாவளிக்கான SOP-கள்!
நிபந்தனைக்குட்பட்ட மற்றும் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் உள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள், தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதி இல்லை.
துணை மாவட்டங்கள், மாவட்டங்கள் மற்றும் மாநில எல்லைகளை கடக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அறிவித்துள்ளார்.
CMCO பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களில், தீபாவளிக்கான முதல் நாள் மட்டுமே பக்தர்கள் கோயில் வழிபாடுகளில் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
கோயில்கள், பக்தர்களின் உடல் வெப்ப நிலையை அளவிடுவது உள்ளிட்ட COVID-19 மீதான அனைத்து SOP-களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் சொன்னார்.
நாள்பட்ட நோயால் வாடுபவர்கள், வயதானவர்கள், 12 வயதுக்கும் குறைவான பிள்ளைகள் கோயில்களுக்குச் செல்ல ஊக்குவிக்கப்படவில்லை.
ஒரே நேரத்தில், 30-க்கும் அதிகமானோர் கோயில்களுக்குள் நுழைய அனுமதி இல்லை.
பூஜைகள், காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள், தலா 30 நிமிடங்களுக்கு என ஐந்து முறை மட்டுமே நடத்தப்படவேண்டும்; ஒவ்வொரு பூஜைகளுக்கு பிறகும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எனினும், EMCO அதாவது கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமுலில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த கோயில்கள் செயல்பட அனுமதியில்லை.
அதே போல், CMCO பகுதிகளில், தீபாவளியின் போது தரை வீடுகளில் ஒரே நேரத்தில் அதிகப்பட்சம் 20 பேர் மட்டுமே ஒன்றுக்கூட முடியும்.
எனினும், EMCO பகுதிகளில் ஒரே குடும்பத்தில் வசிப்பவர்கள் மட்டுமே ஒன்றாக தீபாவளியை கொண்டாட அனுமதிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather