Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

இரு வாரங்களுக்கு ஒரு முறை COVID-19 பரிசோதனை!

Nov 04, 2020


நாடாளுமன்றம் செல்ல வேண்டியவர்கள், இரு வாரங்களுக்கு ஒரு முறை COVID-19  பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என, சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றம் தொடர்புடைய மூவருக்கு COVID-19  தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்துக்கான SOP-களை கடுமையாக்குவதுப் பற்றி அமைச்சு ஆராய்கின்றது.

இவ்வேளையில், நாட்டில் ஆரஞ்சு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கூட நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்படலாம் என சுகாதார அமைச்சு கூறியிருக்கின்றது.

அப்பகுதிகளில் அத்தொற்று தொடர்ந்து பரவாமல் இருப்பதை உறுதிச் செய்ய CMCO விதிக்கப்படலாம் என Tan Sri Dr Noor Hisham Abdullah  தெரிவித்தார்.

ஆரஞ்சு மண்டலங்கள் என்பது 21 முதல் 40 வரையிலான COVID-19 சம்பங்களை கொண்ட பகுதிகளாகும்.

நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அத்தொற்றினால் ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ள வேளை, புதிதாக ஆயிரத்து 54 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சிரம்பானில் CMCO!

நெகிரி செம்பிலான் சிரம்பானில் நாளை தொடங்கி 14 நாட்களுக்கு, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO அமுலுக்கு வரவுள்ள நிலையில், அம்மாவட்ட மக்கள் தொடர்ந்து SOP-களை பின்பற்றுவார்கள் என்பதே மாநில அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என  ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன் சுப்ரமணியம் கூறுகின்றார். 

குறிப்பாக, தீபாவளிப் பண்டிகையை கொண்டாட காத்திருக்கும் இந்தியர்கள் இந்த CMCO முடிவை, சுமையாக கருதாமல், அதன் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்வார்கள் என தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.

சிரம்பானிலுள்ள வணிகர்களுக்கு அவர் இதனை தெரிவித்தார்.

"வணிகர்கள் வழக்கம் போல் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு தங்களது வியாபாரத்தை தொடரலாம்; ஆனால், மாநில அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள SOP-களை தவறாமல் பின்பற்றுங்கள்" 

சிரம்பானுக்கு வெளியே வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளவர்கள், தங்களது முதலாளிகளிடம் இருந்து பயண அனுமதிக் கடிதத்தைப் பெற வேண்டும் என்பதையும் வீரப்பன் நினைவுறுத்தினார்.

சிரம்பானில் கொரோனா சம்பங்களை கட்டுப்படுத்த ஏதுவாக அறிவிக்கப்பட்டுள்ள CMCO, Ampangan, Labu, Rantau, Rasah, Lenggeng உள்ளிட்ட 9 துணை மாவட்டங்களை உட்படுத்தியிருக்கின்றது.

அமெரிக்க அதிபர் தேர்தல்!

கொரோனாப் பரவலுக்கு மத்தியில், நடப்பு அதிபர் Donald Trump-புக்கும் – ஜனநாயகக் கட்சி வேட்பாளர் Joe Biden-னுக்கும் இடையிலான அமெரிக்க அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதன் முன்கூட்டிய வாக்களிப்பில் இதுவரை 100 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather