← Back to list
மீண்டும் நான்கிலக்கத்தை எட்டியது Covid-19!
நாட்டில் புதிதாக Covid-19 பீடித்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் நான்கிலக்கத்தை எட்டியுள்ளது!
இன்று மட்டும் ஆயிரத்து 54 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், அவற்றுள் 1040 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியவை.
12 புதிய மரணங்கள் பதிவாகி, மரண எண்ணிக்கை 263ஆக அதிகரித்துள்ளது.
______
நெகிரி செம்பிலான், Seremban-னுள்ள ஒன்பது துணை மாவட்டங்களிலும் வரும் வியாழக்கிழமை தொடங்கி நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வருகின்றது.
அங்கு Covid-19 சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நவம்பர் 18ஆம் தேதி வரை CMCO அமுலில் இருக்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான முத்த அமைச்சர் Datuk Sri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
_______
இதனிடையே மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நாடு முழுவதும் நேற்று மட்டும் 381 கைதாகினர்.
அவர்களில் 372 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டு, ஒன்பது பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.
_______
தேர்தலை ஒத்தி வைப்பது மீதான புதிய சட்டத்தை வரைய அரசாங்கத்துக்கு எண்ணமில்லை!
மாறாக அவசர நிலையை அறிவிப்பதன் வழி தேர்தலை ஒத்தி வைப்பதன் மூலம் தேர்தலை ஒத்தி வைக்க பரிந்துரைக்க முடியும் என சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் Datuk Takiyuddin Hassan கூறியுள்ளார்.
Covid-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் தேர்தலை ஒத்தி வைப்பதற்கான சாத்தியங்கள் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது, Takiyuddin அவ்வாறு குறிப்பிட்டார்.
_____
Covid-19 பரிசோதனை மேற்கொண்ட பிறகு உதவி போலீசார் உட்பட நாடாளுமன்றத்தைச் சேர்ந்த பணியாளர்கள் யாருக்கும் அத்தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலவை உறுப்பினர் ஒருவரின் அதிகாரிக்கும், பத்திரிக்கையாளர் ஒருவருக்கும் மட்டுமே அத்தொற்று கண்டுள்ளது.
இதனிடையே இன்று முதல் வியாழக்கிழமை வரை கூட்டத்தை காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 1 மணி வரை மட்டுமே நடத்த மக்களவையில் இன்று இணக்கம் காணப்பட்டது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather