Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19: ஆயிரம் பேர் இன்று மீண்டு வந்தனர்!

Nov 02, 2020


நாட்டில் இன்றும் Covid-19 புதிய சம்பவங்களின் எண்ணிக்கையை விட, அத்தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியுள்ளது!

900 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

834 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள வேளை, அவற்றுள் 831 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியவை.

இரு புதிய மரணங்கள் பரிவானதைத் தொடர்ந்து, மரண எண்ணிக்கை 251ஆக அதிகரித்துள்ளது.

_______

ஜொகூரிலுள்ள சுகாதார அமைச்சின் பயிற்சி கழகத்தில் இன்று நள்ளிரவு தொடங்கி கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வருகின்றது.

அந்த EMCO இம்மாதம் 16ஆம் தேதி வரை இருக்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Sri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.

இதனிடையே Labuan, Kampung Saguking Lautடிலும், Kampung Sebor Baruவிலும் அமுலில் இருந்த EMCO நாளையோடு முடிவடைகின்றது.

_______

தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு புதிய தர செயல்பாட்டு நடைமுறை SOPக்களை அரசாங்கம் இவ்வாரம் அறிவிக்கும்.

முதல் கட்டமாக வரையப்பட்ட SOPக்கள் சரி பார்க்கப்பட்டு அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் சொன்னார்.

எனவே இவ்வார இறுதிக்குள் மேம்படுத்தப்பட்ட அந்த SOPக்கள் அறிவிக்கப்படும் என்றாரவர்.

_______

ஊழியர் சேமநிதி வாரியம் EPF-பின் முதல் கணக்கில் இருந்து பணத்தை மீட்க, அதன் சந்தாதாரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளனம் கருத்து தெரிவித்திருக்கிறது.

நாட்டில் Covid-19 பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ள இக்காலக் கட்டத்தில், அவ்வாறான சலுகை மக்களின் சுமையைக் குறைக்க ஓரளவு உதவும் என FOMCA தலைவர் Datuk Dr மாரிமுத்து நடேசன் கூறினார்.

2021 வரவு செலவு அறிக்கை வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படும் நிலையில், Datuk மாரிமுத்து அவ்வாறு தமது எதிர்பார்ப்பை வெளியிட்டார்.

______

Astro Radio News twitterரில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 76 விழுக்காட்டினர் Covid-19 தாக்கத்தை எதிர்கொள்வதில் மக்களின் சுமையைக் குறைக்க ஊழியர் சேமநிதி வாரியம் EPF-பின் முதல் கணக்கில் இருந்து பணத்தை மீட்க, அதன் சந்தாதாரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் எனக் கருத்துரைத்துள்ளனர்.

அவ்வாக்கெடுப்பில் பங்கேற்ற 78 பேரில் சுமார் 24 விழுக்காட்டினர் அதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather