← Back to list
ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்!
Nov 02, 2020
மூன்றாம் தவணைக்கான மூன்றாவது மக்களவைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது!
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் வேறுபாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, மீண்டும் தலைதூக்கியுள்ள Covid-19னை எதிர்கொள்வதில் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் என மக்களவை சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.
இம்முறை மக்களவைக் கூட்டத்தில், Covid-19னுக்கு எதிரான போராட்டம், வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படும் 2021 வரவு செலவு அறிக்கை ஆகியவை குறித்து முக்கியமாகப் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021 வரவு செலவு அறிக்கையில், கல்வித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என கல்விக்கான பெற்றோர் நடவடிக்கைக் குழு PAGE எதிர்ப்பார்க்கிறது.
தங்களது எதிர்பார்ப்பு குறித்து விவரிக்கிறார் PAGEஜின் கௌரவச் செயலாளர் Tunku Munawirah Putra…
“A consideration for budget allocation should also be made for improvements in digital learning and ensuring that schools are able to conduct physical classes based on the reduced number of students, as a measure of crowd control to cope with schooling amidst Covid-19. “
2021 பட்ஜெட் வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
கடந்த செப்டம்பரில் இருந்து நாட்டில் Covid-19 பரவலின் மூன்றாம் அலையைத் தொடர்ந்து Talian Kasih சேவையை மக்கள் மீண்டும் அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அச்சேவை மையத்திற்கு வரும் அழைப்புகள் இரு மடங்கு அதிகரித்திருப்பதாக மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.
நடப்பு விவகாரம், moratorium சலுகை, நிதி விஷயங்கள் ஆகியவை தொடர்பில் அதிக அழைப்புகள் கிடைப்பதாக அது மேலும் கூறியது.
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைத் தொடர்ந்து taskaக்கள் மூடப்பட்டுள்ளதால் தங்களது பிள்ளைகளைக் கவனிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கும் வேலை செய்யும் பெற்றோர்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் சிறந்த தீர்வைக் கண்டறியும்.
அதன் தொடர்பில் சுகாதார அமைச்சின் ஆலோசனை பெறப்படும்.
சிறார்கள் Covid-19 பீடிக்கும் அபாயம் அதிகமுள்ளவர்கள் என்பதால் taskaக்களை மூட வேண்டியது அவசியமாவதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
நாட்டின் சுகாதார சிகிச்சைகள் போதுமான அளவில் இல்லாமல் சிறிது பற்றாக்குறை நிலை காணப்படுவதாக வெளியிடப்பட்டுள்ள அனைத்துலக கட்டுரையொன்று அடிப்படையற்றது.
மக்களுக்குப் போதுமான சிகிச்சை வழங்க அதிக உதவித் தொகை ஒதுக்கப்படுவதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
அதோடு மலேசியா சிறந்த, தரமான சுகாதார சிகிச்சைச் சேவைகளை அளித்து வருவதை உலக சுகாதார நிறுவனம் WHO அங்கீகரித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather