Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மது போதையில் வாகனமோட்டுவோரின் எண்ணிக்கை குறையவில்லை!

Nov 01, 2020


மது போதையில் வாகனமோட்டுவோருக்கு எதிரான தண்டனை கடுமையாக்கப்பட்டுவிட்ட பிறகும், இன்னும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக மது அருந்தி வாகனமோட்டும் சம்பவங்கள் பதிவாகத்தான் செய்கின்றன. 

ஜொகூரில் சில பகுதிகளில் தமது தரப்பு மேற்கொண்ட Ops Mabuk சோதனைக்குப் பிறகு, அம்மாநில காவல் துறை அவ்வாறு தெரிவித்துள்ளது.

அதற்கான தண்டனை கடுமையாக்கப்பட்டது, வாகனமோட்டிகளிடையே அதற்கான விழ்ப்புணர்வில் முன்னேற்றத்தைக் காட்டுகின்றதா எனக் கேட்ட போது, ஒரு சிலர் மட்டுமே அச்சட்டத்தைப் பின்பற்றுவதாக அது கூறியது.

தவிர குற்றவாளிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால், தண்டனை கடுமையாக இருப்பதாக சில அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தி வருவது வருத்தமளிப்பதாகவும் அது கூறியது.

______

தைவான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மலேசிய மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, அந்நாட்டு அதிபர் சம்பந்தப்பட்ட மாணவியின் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இச்சம்பவமானது, தைவானின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறிய அந்நாடு, இது முழுமையாக விசாரிக்கப்பட்டு, மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகாழிதிருப்பதை தமது தரப்பு உறுதிச் செய்யும் என்றது.

முன்னதாக அம்மாணவியைக் காணவில்லை என சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் புகாரளித்திருந்ததை அடுத்து, 28 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் தான் அப்பெண்ணை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் காவல் துறை கூறியது.

_______

நாட்டில் Covid-19 தொற்று நிலவரம் ஒரு பக்கமிருக்க, விரைவில் வரக்கூடிய பொது தேர்தலுக்கு ஏற்ற புதிய தர செயல்பாட்டு நடைமுறை SOPக்களை தேர்தல் ஆணையம் வெளியிடவிருக்கின்றது.

அப்புதிய SOPக்கள் சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கு ஏற்ப இருக்கும் என SPR தலைவர்  Datuk Abdul Ghani Salleh உத்தரவாதம் அளித்துள்ளார்.

இணையம் வாயிலான தேர்தல் பிரச்சாரங்கள் போன்ற புதிய மற்றும் கடுமையாக வரையப்பட்டுள்ள அந்த SOPக்கள், கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

_______

நாட்டின் எழுச்சிக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் வழி செய்ய ஏதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் வேற்றுமைகளை தள்ளி வைத்து  2021 வரவு செலவு திட்டம் நிறைவேற பங்காற்றுவர் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin நம்புகின்றார்.

வரும் ஆறாம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள அந்த பட்ஜட்டில், அரசாங்கம் சில திட்டங்களை அறிவிக்கும் என பிரதமர் சொன்னார்.

_________

நெகிரி செம்பிலான் கல்வித் துறை வரும் 12ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.

அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலருக்கு Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய கல்வித் துறை தெரிவித்தது.

_________

ஜொகூர், Kota Tinggiயில் வெள்ளத்தால் சுமார் 15 பேர் தற்காலிக துயர் துடைப்பு மைய்யத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather