Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கெடாவில் CMCOவுக்கு முடிவு!

Oct 30, 2020


நாட்டில் இன்று 799 புதிய Covid-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன!

அவை அனைத்தும் உள்நாட்டில் பரவியவை என சுகாதார தலைமை இயக்குனர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.

ஆக அதிகமாக சபாவில் தான் 466 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

மேலும் மூன்று மரணங்கள் பதிவாகி, மரண எண்ணிக்கை 249ஆக உயர்ந்துள்ளது.

______

கெடா Kampung Padang Che Masசில் அமுலில் இருக்கும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது.

அங்கு புதிய Covid-19 சம்பவங்கள் பதிவாகாததைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு தொடங்கி அங்கு அமுலில் இருந்த CMCO முடிவுக்குக் கொண்டு வரப்படுபதாக, பதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Sri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.

_______

 

இதனிடையே நாடு முழுவதும் மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் SOPக்களை மீறியதற்காக நேற்று 553 பேர் கைதாகியுள்ளனர்.

அவர்களில் 532 பேருக்குத் தண்டம் விதிக்கப்பட்டு 21 பேர் தடுத்து வைக்கப்பட்டதாக அமைச்சர் சொன்னார்.

_______

நாட்டிலுள்ள திரையரங்குகள் மீண்டும் மூடப்படுகின்றன!

அடுத்த மாதம் தொடங்கி, பின் அறிவிக்கப்படும் தேதி வரை நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படுவதாக மலேசிய திரையரங்க நடத்துனர்கள் சங்கம் MAFE தெரிவித்துள்ளது.

Covid-19-னால் கடந்த மார்ச் மாதம் தொடங்கி, பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருவது கணிசமாக குறைந்துவிட்டதாகவும், அதனால் லட்சக்கணக்கில் நட்டம் ஏற்பட்டதாகவும் அச்சங்கம் தெரிவித்தது.

அதோடு, SOPக்களையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றவே தமது தரப்பு ஏராளமாக செலவிட நேரிடுவதால், தற்காலிகமாக திரையரங்குகளை மூட முடிவெடுக்கப்பட்டதாக MAFE தெரிவித்தது.

_______

நெகிரி செம்பிலான், Nilaiயில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் உள்ள பகுதியைச் சேர்ந்த, ஒன்பது முஸ்லீம் அல்லாத வழிப்பாட்டு தளங்கள் மூடப்பட்டுள்ளன.

Covid-19-னைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக மாநில அரசிடம் பதிந்து கொள்ளாத சிறு வழிபாட்டுத் தளங்களும் மூடப்படும் என மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

Nilaiயில் கடந்த 28ஆம் தேதி தொடங்கி 14 நாட்களுக்கு, இரு வெவ்வேறு இடங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையும், கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையும் அமுலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

_______

நவம்பர் ஆறாம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவு செலவு திட்டத்தில், Covid-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்காகக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

பரிவுமிக்க அரசாங்கம் என்ற முறையில், Covid-19னை முற்றாக அழிப்பதற்காக 2021 பட்ஜட்டில் கூடுதல் செயல்முறை திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather