Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தீபாவளிக்கான SOP இவ்வாரம் தெரிய வரும்!

Oct 27, 2020


நாட்டில் இன்று புதிதாக 835 Covid-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அவற்றுள் 830 உள்நாட்டில் பரவியவை.

மேலும் இரு மரணங்கள் பதிவான வேளை மரண எண்ணிக்கை 238ஆக உயர்ந்துள்ளது.

________

தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு தர செயல்பாட்டு நடைமுறைகள் குறித்து தனது தரப்பு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்னும் ஏறக்குறைய இரு வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில் அது குறித்து இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படலாம் என கோடி காட்டியுள்ளார் Datuk Sri Ismail Sabri Yaakob.

________

இதனிடையே சிலாங்கூர் Hulu Langatடில் இரு இடங்களில் இன்று நள்ளிரவு தொடங்கி இரு வாரங்களுக்குக் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வருகின்றது.

Sungai Emas அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் Kajang Plaza Hentian ஆகியவையே அவ்விரு இடங்களாகும்.

________

வரும் நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி Putrajayaவில் மூன்றடுக்கு சுவாசக் கவசத்தின் விலை ஒரு ரிங்கிட்டிலிருந்து 70 சென்னுக்குக் குறைக்கப்படுகிறது!

நாட்டில் சுவாசக் கவசத்திற்கான தேவை அதிகரித்திருப்பதோடு, பொது இடங்களில் சுவாசக் கவசம் அணியாதது ஒரு குற்றச்செயல் என்பதைக் கருத்தில் கொண்டு, அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

________

கிருமி நாசினி தெளித்து துப்புரவு செய்யும் பணிகளுக்காக USJ ஐந்தில் உள்ள சுபாங் ஜெயா மாநகர் மன்ற தலைமையகம் இன்று மூடப்பட்டுள்ளது.

அதன் ஊழியர் ஒருவருக்கு Covid-19 உறுதிப்படுத்தப்பட்டிருப்பதை அடுத்து அவ்வாறு செய்யப்படுகின்றது.

நாளை அவ்வலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டுவிடும் என தெரிவித்த அம்மன்றம், அதுவரை தேவையான சேவைகளை பொது மக்கள், இணையம் வாயிலாகப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தது.

_______

தேர்வு வாரிய அதிகாரி ஒருவருக்கு Covid-19 உறுதிப்படுத்தப்பட்டிருப்பதை அடுத்து, நெகிரி செம்பிலான் மாநில கல்வி துறை அலுவலகம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுகிறது.

இந்த மூன்று நாட்களுக்கு அங்கு கிருமி நாசினி தெளித்து துப்புறவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் S வீரப்பன் தெரிவித்தார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather