Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அனைத்து துறைகளும் இல்லை!

Oct 22, 2020


நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO அமுலில் உள்ள பகுதிகளில் இன்று தொடங்கியுள்ள வீட்டில் இருந்து வேலை செய்யும் உத்தரவு அனைத்து துறைகளையும் உட்படுத்தவில்லை.

அந்த உத்தரவு பொதுச் சேவைத் துறை ஊழியர்கள் மற்றும் அனைத்துலக வாணிக மற்றும் தொழில் துறை அமைச்சின் கீழ் உள்ள துறைகளுக்கு மட்டுமே பொருந்தும் என, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Sri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.

இவ்வேளையில், COVID-19 பரிசோதனை குறித்தும் Datuk Seri Ismail Sabri தெளிவுப்படுத்தியிருக்கின்றார்.

கட்டுமானம் மற்றும் பாதுகாவலர் துறைச் சார்ந்த அந்நிய தொழிலாளர்கள் அப்பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றாரவர்.

அதே சமயம், அத்தொற்றுக்கான அறிகுறிகள் கொண்டவர்களும் அப்பரிசோதனை செய்ய வேண்டும். 

சிவப்பு மண்டலப் பகுதிகளில் உள்ள வேலைக்குச் செல்லும் மற்றவர்களுக்கு அப்பரிசோதனை கட்டாயம் இல்லை என்றாலும், அவர்கள் அப்பரிசோதனை செய்ய ஊக்குவிக்கப்படுவதாக அமைச்சர் சொன்னார்.

 

 

அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம்!

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அடுத்து, பொது மக்களில் இன்னும் சிலர் பதற்றத்தில் அத்தியாசியப் பொருட்களை வாங்கிக் குவித்து வரும் நிலை நீடிக்கின்றது!

இதன் தொடர்பில் பேசிய, உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு, நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பு போதுமான அளாவில் இருப்பதாக கூறியது.

எனவே பொது மக்கள் அதன் தொடர்பில் கவலைப்படத் தேவையில்லை என்றும் அது வலியுறுத்தியது.

அதே சமயம், வியாபாரிகள், பொருட்களின் விலையை அதிகரித்து, கொள்ளை லாபம் ஈட்டுவதை தடுக்க தொடர் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

 

அம்னோவின் அதிரடி முடிவு!

அரசியல் சண்டை சச்சரவுகளை நிறுத்தி வைக்க அம்னோ எடுத்துள்ள முடிவை பலரும் வரவேற்றுள்ளனர்!

நாடு எதிர்நோக்கியுள்ள இம்மோசமான காலக்கட்டத்தில், அம்முடிவு சிறந்ததொரு நடவடிக்கை என கூறுகின்றார், அரசியல் ஆய்வாளர் Dr Mohd Tawfik bin Yakob.

"Untuk apa? Untuk negara kita, untuk memastikan kestabilan ekonomi, untuk memastikan kita membawa semula politik yang matang. Biarlah kita bertelagah tentang politik sebelum ini, itu semua sudah berlalu. Sekerang kita perlu melakukan sesuatu untuk kebaikan negara"

COVID-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை உறுதிச் செய்யும் பொருட்டு அம்முடிவுக்கு வந்திருப்பதாக UMNO தலைவர் Datuk Seri Ahmad Zahid Hamidi நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார். 

ஒரு வாரத்திற்கு முன்னர், பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசின் தலைமையிலான Perikatan Nasional அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்பது குறித்து பரிசீலிப்பதாக அம்னோ அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், மனம் மாறியுள்ள அம்னோ, நடப்பு அரசாங்கத்திற்கான ஆதரவை நேற்றைய அறிக்கையில் மறு உறுதிபடுத்தியிருக்கிறது.

லிட்டல் இந்தியாவில் கொண்டாட்டம் ரத்து!

அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவிருந்த கோலாலம்பூர் லிட்டல் இந்தியாவின் 10-ஆம் நிறைவாண்டுக் கொண்டாட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் அறிவித்துள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை KL-லையும் உட்படுத்தியிருப்பதால் அம்முடிவெடுக்கப்பட்டதாக, அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் வழக்க நிலைக்கு திரும்பியது!

கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்ட அனைத்து ஆயிரத்து 292 இடங்களிலும், தண்ணீர் விநியோகம் முழுமையாக வழக்க நிலைக்கு  திரும்பியிருப்பதாக Air Selangor நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather