Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நீர் விநியோகம்: கட்டங் கட்டமாகச் சீரடைந்து வருகிறது!

Oct 20, 2020


இன்று காலை 9 மணி வரை கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 13 விழுக்காட்டு இடங்களில் நீர் விநியோகம் சீரடைந்துள்ளது.

எஞ்சியுள்ள ஆயிரத்து 130 பகுதிகளில் நீர் விநியோகம் கட்டங் கட்டமாக வழக்கத்திற்குத் திரும்பும் என Air Selangor அறிக்கை வழி தெரிவித்துள்ளது.

அது குறித்த மேல் விவரங்களை Air Selangorரின் அதிகாரப்பூர்வ இணைய அகப்பக்கத்திலும் சமூக வலைத்தளங்களிலும் காணலாம். 

சிலாங்கூர் ஆற்று நீர் தூய்மைக்கேட்டால் செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட நான்கு சுத்திகரிப்பு ஆலைகள் நேற்று மாலை தொடங்கி மீண்டும் இயங்கி வருகின்றன.

சிலாங்கூர் ஆற்று நீர் மாசடைந்தது தொடர்பில் தகவல் கொடுத்து உதவுவோருக்கு 20 ஆயிரம் ரிங்கிட் வெகுமதி வழங்க மாநில அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.

அதே சமயம், அத்தூய்மைக்கேட்டுக் காரணமான தரப்புக்கு அதிகபட்ச அபராதம் உட்பட கடும் தண்டனை விதிப்பது குறித்தும் மாநில சட்ட மன்றக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் என மாநில சுற்றுச் சூழல் செயற்குழுத் தலைவர் கூறியுள்ளார்.

இவ்வேளையில், ஆற்று நீர் மாசடையும் விவகாரங்களைக் கையாள உயரிய தொழில்நுட்பமுடைய dron கருவிகள் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Covid-19 பரவல் சவாலுக்கு மத்தியில், கிள்ளான் பள்ளத்தாக்கில் அடிக்கடி ஏற்படும் நீர் விநியோகத் தடையால் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து சிலாங்கூர் சுல்தான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டில் இருந்தே அப்பிரச்னை குறித்து தாம் பலமுறை கூட்டரசு அரசாங்கத்திற்கும் மாநில அரசுக்கும் கடிதங்கள் அனுப்பி விட்டதாக அவர் அறிக்கை வழி குறிப்பிட்டார்.

நீர் மக்களின் அடிப்படைத் தேவை என்பதால், அவ்விவகாரத்தை அரசியலாக்காமல் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் வலியுறுத்தினார். 

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அனைத்து சமூக நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

Covid-19 பரவல் சங்கிலியாகத் தொடர்வதைத் தடுக்க அது அவசியம் என சுகாதார தலைமை இயக்குனர் Tan Sri Dr Noor Hisham Abdullah வலியுறுத்தினார். 

"Kita izinkan sektor ekonomi berfungsi tetapi sektor lain seperti sukan, sosial dan pelajaran dalam lokaliti yang dikenal pasti (perlu) dihentikan dulu, kita nasihatkan mereka kalau boleh, duduk di rumah" 

அந்நடவடிக்கை இதற்கு முன் பலனைக் கொண்டு வந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார். 

CMCO அமலில் உள்ள இடங்களில் உடற்பயிற்சி மையங்கள், வர்த்தக ரீதியிலான கால்பந்து திடல்கள், futsal மையங்கள் மீண்டும் செயல்பட முன்னதாக அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகி வருவதால், சிலாங்கூர் மாநிலத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைக் கடுமையாக்குவது மீதான பரிந்துரைகளை தேசிய பாதுகாப்பு மன்றம் ஆய்வு செய்து வருகிறது. 

அதன் மீதான மேல் மதிப்பீடுகளை அரசாங்கம் செய்யும் முன், அம்மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள CMCO நீடிக்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்தார். 

சிலாங்கூர், KL, Putrajayaவில் CMCO இம்மாதம் 27 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.  

Covid-19 பரவலால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வங்கிக் கடன்களுக்கான தவணைப் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்கான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும். 

சம்பந்தப்பட்டவர்கள் மாதாந்திர தவணைப் பணத்தைக் குறைத்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம். 

அல்லது வங்கிக் கடன்களுக்கான தவணைப் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைக் காலம் moratoriumமை நீட்டிக்கக் கேட்டுக் கொள்ளலாம் என Bank Negara தெரிவித்தது. 

அதன் தொடர்பில் அவர்கள் தத்தம் வங்கிகளைத் தொடர்பு கொண்டு கலந்து பேசலாம்.

Covid-19 பரவலைக் கருத்தில் கொண்டு மலாக்காவில் தீபாவளிச்  சந்தை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

வணிகர்களுடனான கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாக மாநில முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்தது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather