Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

80% சம்பவங்கள் அறிகுறிகள் காட்டவில்லை!

Oct 17, 2020


நாட்டில் பேராக், கெடா, சிலாங்கூர் ஆகிய இடங்களை உட்படுத்தி மூன்று புதிய COVID-19 cluster-கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவை Lekir, Buntar மற்றும் Merbok cluster-கள் என சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.

ஆகக் கடைசியாக நாட்டில், 629 புதிய கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவான வேளை, ஆறு பேர் அத்தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அப்பெருந்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை, ஆறாயிரத்து 323ஆக அதிகரித்துள்ளது.

இவ்வேளையில், சபாவில் கண்டறியப்பட்ட பெரும்பாலான கொரோனா சம்பவங்கள் asymptomatic என Dr Noor Hisham தெரிவித்துள்ளார்.

அதாவது அம்மாநிலத்தில் பதிவான 70 முதல் 80 விழுக்காட்டு சம்பவங்கள், மிதமான அறிகுறிகளை கொண்டுள்ளன; அல்லது அறவே அறிகுறிகள் காட்டவில்லை என்றாரவர்.

கூடுதல் 2 மணி நேரம்!

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு மத்தியில், இன்று தொடங்கி சபாவில், குறிப்பிட்ட வணிகங்கள் கூடுதல் இரண்டு மணி நேரங்கள் செயல்பட அனுமதிகப்படுகின்றன.

உணவகங்கள், மருந்தகங்கள், பலசரக்கு கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் அதிலடங்கும்.

இதற்கு முன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயப்பட்டு வந்த அவை, இனி இரவு 8 மணி வரை திறந்திருக்கலாம்.
 

பேரங்காடியில் கொரோனா சம்பவம்!

ஆகக் கடைசியாக, PJ-வில் உள்ள பேராங்காடி ஒன்றில், COVID-19 தொற்று சம்பவம் பதிவாகியிருக்கின்றது.

அப்பேரங்காடியில் உள்ள கடை ஊழியர் ஒருவருக்கு அத்தொற்றுப் பீடித்தது  உறுதிப்படுத்தப்பட்டதை, அக்கடை ஊழியர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பரிசோதனை முடிவில் அவர்களுக்கு அத்தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில், அவர்கள் 14 நாட்களுக்கு சுயமாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அப்பேரங்காடி முழுக்க கிருமி நாசனி தெளிக்கப்பட்டு, துப்புரவு செய்யப்பட்டுள்ளது; அது இன்று வழக்கம் போல் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வங்கிக் கணக்கு திறப்பு!

COVID-19 பெருந்தொற்றுக்காக நன்கொடைகள் திரட்டும், பிரத்தியேக வங்கிக் கணக்கை சுகாதார அமைச்சு மீண்டும் முடுக்கி விட்டுள்ளது.

அவ்வங்கி கணக்கில் ரொக்கப் பணத்தை நன்கொடையாக வழங்குபவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.

அந்த நன்கொடைப் பணம், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள்  வாங்கவும், இதர மருத்துவம் சார்ந்த தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தண்ணீர் விநியோகம் குறித்த தகவல்!

Shah Alam-மில் கட்டுமானத் தளமொன்றின் அருகே, நீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் நிலைமை தொடர்ந்து சீரடைந்து வருகின்றது.

ஆகக் கடைசி நிலவரப்படி, Kuala Langat மாவட்டத்தில் தண்ணீர் விநியோகம் முழுமையாக வழக்க நிலைக்கு திரும்பியிருப்பதாக Air Selangor தெரிவித்தது.

கிள்ளான் மற்றும் Shah Alam-மில் ஏறக்குறைய 84 விழுக்காட்டுப் பகுதிகளில் தண்ணீர் விநியோகம் சீரடைந்துள்ளது.

Taman Sentosa, Taman Sri Andalas, Pulau Ketam உள்ளிட்ட இன்னும் 8 பகுதிகளில் தண்ணீர் விநியோகம் தொடர்ந்து சீரைந்து வருவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

பகல் மூன்று மணிக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் விநியோகம் முழுமையாக வழக்க நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் Air Selangor கூறியது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather