← Back to list
கிள்ளான் பள்ளத்தாக்கில் மீண்டும் நீர் விநியோகத் தடை!
Oct 19, 2020
கிள்ளான் பள்ளத்தாக்கு மக்கள் மீண்டும் நீர் விநியோகத் தடையை எதிர்நோக்கியிருக்கின்றனர்.
சிலாங்கூர் ஆற்றின் சுத்திகரிக்கப்படாத நீர் வளத்தில் தூய்மைக்கேடு ஏற்பட்டுள்ளதால், ஒன்று, இரண்டு மூன்றாம் கட்ட நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் Rantau Panjang நீர் சுத்திகரிப்பு ஆலையின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதனால் KL, Petaling, Klang/Shah Alam, Kuala Selangor, Hulu Selangor, Gombak, Kuala Langat கிட்டதட்ட ஆயிரத்து 300 பகுதிகளில் அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியலை Air Selangorரின் இணைய அகப்பக்கத்தில் காணலாம்.
நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கொள்கல லாரிகளின் மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக Air Selangor தெரிவித்துள்ளது.
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்குமாறு அவர்களின் முதலாளிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
“Saya akan bawak dalam mesyuarat khas MKN…terus bekerja di pejabat ataupun syarikat-syarikat perniagaan ini”
கிள்ளான் பள்ளத்தாக்கில் வேலையிடங்களை உட்படுத்திய புதிய clusterகள் அதாவது திரளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து அவர் அவ்வாறு வலியுறுத்தினார்.
சிலாங்கூர், KL, Putrajaya, சபாவில் தற்போது அமலில் உள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு எதிர்பார்க்கின்றது.
அதன் தொடர்பில் கூடிய விரைவில் தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் கலந்து பேசப்படும் என சுகாதாரத் தலைமை இயக்குனர் கூறியிருக்கிறார்.
CMCOவைக் கடுமையாக்குவதன் வழி Covid-19 பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சபாவில் Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாகி வரும் நிலையில், அப்பரவலைக் கட்டுப்படுத்த கூட்டரசு அரசாங்கம் அம்மாநிலத்திற்கு அவசர நிதி வழங்க வேண்டும் என மலேசிய மருத்துவச் சங்கம் பரிந்துரைத்துள்ளது.
சுய பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவச் சாதனங்கள், கூடுதல் சுவாசக் கருவிகள், தனிமைப்படுத்தி வைக்கும் மையங்கள், உள்ளிட்ட விஷயங்களுக்குக் கூடுதல் நிதி தேவைப்படுவதாக MMA சுட்டிக் காட்டியது.
சபாவில் இருந்து திரும்பிய பெண்மணி ஒருவர், Covid-19 தொற்றால் உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவலை சுகாதார அமைச்சு மறுத்திருக்கிறது.
அப்பெண்ணுக்கு இதற்கு முன் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு அக்கிருமித் தொற்று இல்லை எனத் தெரிய வந்ததாகக் கூறப்படுவதும் உண்மையில்லை.
எனவே அத்தகவலைப் பகிர வேண்டாம் என அது பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது.
கெடாவில், Alor Setar சிறைச் சாலைச் சுற்று வட்டாரத்தில் கடுமையாக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் Covid-19 சம்பவங்கள் அதிகம் பதிவாயுள்ளதை அடுத்து நவம்பர் ஒன்றாம் தேதி வரை EMCO அமலில் இருக்கும்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather