Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

CMCO- பலன் ஒரு வாரத்தில் தெரியும்!

Oct 14, 2020


COVID-19 பரவலை தடுக்க, நிபந்தனைக்குட்பட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை CMCO எந்தளவுக்கு உதவியாக இருக்கின்றது என்பதை கண்டறிய குறைந்தது ஒரு வாரம் தேவைப்படலாம்!

சுகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah அதனை தெரிவித்துள்ளார்.

அத்தொற்றுப் பரவலை சுகாதார அமைச்சு மிக அணுக்கமாக கண்காணிக்கும் என்றாரவர்.

CMCO வாயிலாக, மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரம் ஆகிய இரண்டுமே பாதுகாக்கப்படும் என Dr Noor Hisham கூறினார்.

நள்ளிரவு தொடங்கி, சிலாங்கூர், KL மற்றும் Putrajaya-வில் அமுலுக்கு வந்துள்ள CMCO, அக்டோபர் 27 ஆம் தேதி வரை நீடிக்கும்.

சபாவில் இருந்து திரும்புவோருக்கு.....

சபாவில் இருந்து திரும்பும் அனைவரும், COVID-19 தொற்று இல்லை என்றாலும், கட்டாயம் தத்தம் வீடுகளில் 14 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள பலமுறை வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும், சபாவில் இருந்து திரும்புவோரை உட்படுத்தி பதிவாகும் கொரோனா சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு கூறியிருக்கின்றது.

நாட்டில் புதிதாக 660 கொரோனா சம்பவங்கள் பதிவான வேளை, நால்வர் அத்தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 6 புதிய cluster-கள் பதிவாகியுள்ளன; அவற்றில் 4 சபாவை உட்படுத்தியுள்ள வேளை, மற்றவை சிலாங்கூர் மற்றும் பினாங்கில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அப்பெருந்தொற்றுக்காக இன்னும் ஐயாயிரத்து 345 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பதற்றம் வேண்டாம்!

சிலாங்கூர், KL மற்றும் Putrajaya-வில் இன்று தொடங்கி, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வந்துள்ள நிலையில், பதற்றத்தில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என பொது மக்கள் வலியுறுத்தப்படுகின்றனர்.

உணவுப் பொருட்களுக்கான கையிருப்பு போதுமான அளவில் இருப்பதால், மக்கள் கவலைப்படத் தேவையில்லை என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin உத்தரவாதம் அளித்திருக்கின்றார்.

"pengalaman kita yang sudah berapa bulan ini tak ada isu berbangkit dari segi tidak ada bekalan makanan terbukti. jadi tak perlu mereka nak nak beli lebih, dari apa yang sewajarnya nak simpan stok sampai 1 2 bulan saya fikir itu meintakkan kos pembelanjaan dan sebenarnya tidak perlu." 

இவ்வேளையில், COVID-19 தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு,  இலக்கு வைக்கப்பட்டோருக்கான moratorium சலுகை தேவைப்படுபவர்கள், தொடர்ந்து தத்தம் வங்கிகளுடன் கலந்துப் பேசலாம் என்றும் பிரதமர் கூறியிருக்கின்றார்.

அத்தகையோருக்கான தேவைகள் குறித்து பரிசீலித்து, அடுத்தாண்டு வரை அவர்களுக்கு உதவ வங்கிகள் தயாராக இருப்பதையும் Tan Sri Muhyiddin குறிப்பிட்டார்.

கொரோனா சீற்றத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் அல்லது  கடனை திருப்பிச் செலுத்துவதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு அப்பிரத்தியேக உதவி வழங்கப்படும் என்றாரவர்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் அமுலுக்கு வந்துள்ள CMCO குறித்து பேசுகையில் பிரதமர் இத்தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.

மற்றொரு நிலவரத்தில், மத்தியில் ஆட்சி மாற்றம் செய்ய முயற்சித்து வரும் PKR தலைவர் Datuk Seri Anwar Ibrahim-மின் நடவடிக்கையில் கவனம் செலுத்த விரும்பவில்லை என, Tan Sri Muhyiddin கூறியுள்ளார்.

இப்போதைக்கு நாட்டுக்கு எது தேவையோ அந்த விவகாரத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்பதில் தாம் தெளிவாக இருப்பதாக அவர் சொன்னார்.

இவ்வேளையில், UMNO தலைவர் Datuk Seri Ahmad Zahid Hamidi, நாளை மாலை மாமன்னரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றிரவு, அக்கட்சியின் அரசியல் பிரிவு கூட்டத்திற்கு பிறகு, UMNO பொதுச் செயலாளர் Datuk Seri Ahmad Maslan அத்தகவலை வெளியிட்டிருக்கின்றார்.

Perikatan Nasional-லுக்கு ஆதரவு வழங்குவதில் இருந்து பின் வாங்குவதை UMNO பரிசீலிக்க வேண்டும் என,  முன்னதாக அக்கூட்டத்தில் 
முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

PN-னுடனான அரசிய ஒத்துழப்பை தொடர அம்னோ, எழுத்துப்பூர்வமான  புதிய நிபந்தனையும் விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


SPM மறுத்தேர்வு முடிவுகள்!

இவ்வாண்டுக்கான SPM மறுத்தேர்வு முடிவுகள், அடுத்த வாரம் திங்கட்கிழமை வெளியிடப்படும். 

அம்முடிவுகள் அஞ்சல் வழி அனுப்படும்; அல்லது அவற்றை MySMS 15888 எண் சேவை வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம்.
 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather