Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பதற்றமடைந்து பொருட்களை அதிகளவில் வாங்க வேண்டாம்!

Oct 14, 2020


சபாவில் மேலும் நால்வர் Covid-19னுக்குப் பலியாகியிருக்கின்றனர்.

அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 167 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 660 சம்பவங்கள் பதிவாகியுள்ளனன.

அவற்றில் மிக அதிகமாக சபாவில் 429 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கெடா, சிலாங்கூர், பினாங்கு, KLலிலும் கணிசமான சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள பகுதிகளில் உள்ளவர்கள் பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. 

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாக உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது. 

எனவே தேவையானவற்றை மட்டும் வாங்கினால் போதுமானது என அது பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியது. 

சிலாங்கூர், KL, Putrajaya, சபாவில் தற்போது CMCO அமலில் உள்ளது.

கிள்ளான் துணை மாவட்டத்தில் இதற்கு முன் அறிவிக்கப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறை ரத்து செய்யப்படுகிறது.    

இன்று முதல் சிலாங்கூர் மாநிலம் முழுவதும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வந்துள்ளதற்கு ஏற்ப அது அமைவதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள KL, Putrajaya, சிலாங்கூரில் 93 சாலைத் தடுப்புச் சோதனைகள் போடப்பட்டுள்ளன.  

சுமார் ஆயிரத்து 600 காவல் துறை பணியாளர்கள், ராணுவ வீரர்கள், RELA ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளதாக PDRM கூறியது.

மற்றொரு நிலவரத்தில், அவசிய மற்றும் அவசரத் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என சிலாங்கூர் காவல் துறை அம்மாநில மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. 

அதோடு நிர்ணயிக்கப்பட்டுள்ள தர செயல்பாட்டு நடைமுறை SOPக்களைப் பின்பற்றுமாறும் அது வலியுறுத்தியது.

KL, Putrajaya, சிலாங்கூர், சபாவில்CMCO அமலில் இருந்தாலும், தனியார் உயர்க்கல்விக் கழகங்கள் அட்டவணைப்படி அனைத்துலக அல்லது வெளிநாட்டுத் தேர்வுகளை நடத்தலாம்.

தேசிய பாதுகாப்பு மன்றத்துடனான சிறப்புச் சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஏற்ப அந்த அனுமதி வழங்கப்படுவதாக உயர்க்கல்வித் துறையும் உயர்க்கல்வி அமைச்சும் குறிப்பிட்டுள்ளன. 

CMCO விதிக்கப்பட்டுள்ள KL, Putrajaya, சிலாங்கூர், சபாவில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு மாணவர்களையும் 195 வெளிநாட்டு மாணவர்களையும் அது உட்படுத்தியிருக்கிறது.

தாம் Covid-19னில் இருந்து மீண்டிருப்பதாக சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் Datuk Seri Dr Zulkifli Mohd Al-Bakri தெரிவித்திருக்கிறார்.

அதே வேளை தற்போதைக்கு யாரையும் சந்திக்க வேண்டாம் என்றும் வீட்டிலேயே இருக்குமாறு சுகாதார அமைச்சு தமக்கு அறிவுரை கூறியிருப்பதாக அவர் சொன்னார்.

Covid-19 பரவலைக் கட்டுப்படுத்த சிறைச் சாலைகளில் கைதிகளைச் சென்று காண அவர்களின் குடும்பத்தாருக்கு அனுமதி இல்லை. 

சிறைச்சாலைகளில் உள்ள தொலைபேசிகள் அல்லது வீடியோ கலந்துரையாடல் மூலம் அவர்கள் கைதிகளைத் தொடர்பு கொள்ளலாம் என சிறைச் சாலைத்துறை தெரிவித்தது.

மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 284 பேர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களில் பெரும்பாலானோர் சுவாசக் கவசம் அணியாததற்கும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காததற்கும் கைதாகினர்.

CMCO அமலில் உள்ள சிலாங்கூர், KL, Putrajayaவில் Prasarana நிறுவனத்தின் அனைத்து transit ரயில் சேவைகளும் பேருந்து சேவைகளும் வழங்கம் போல் செயல்படுகின்றன.

பிற செய்திகள்......

ஜொகூரில் கடந்த வாரம் ராணுவ வீரர் ஒருவர் மரணமடையக் காரணமானவர் என நம்பப்படும் காரோட்டி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பெண் வேகமாக ஓட்டிச் சென்ற கார் மோதியதில் ராணுவ வீரர் பலியான வேளை மற்றொரு பெண்மணி சிராய்ப்புக் காயங்களுக்கு ஆளானார்.

----- 

தமிழகம் சேலத்தில் உயிருடன் இருந்த தமது அண்ணன் மரணமடையவிருப்பதாகக் கூறி ஆடவர் ஒருவர் அம்முதியவரை இரவு முழுவதும் குளிர்பதனப் பெட்டிக்குள் அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்டை வீட்டுக்காரர்கள் அளித்த புகாரின் பேரில் அந்த ஆடவரைக் கைது செய்து காவல் துறை விசாரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather