← Back to list
13 அமைச்சர்களுக்கு கொரோனாவா?
Oct 09, 2020
ஏறக்குறைய 13 அமைச்சர்களுக்கு COVID-19 தொற்றுப் பீடித்திருப்பதாக பரவியுள்ள தகவலை பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் மறுத்துள்ளார்.
இப்போதைக்கு, பிரதமர் துறையைச் சேர்ந்த சமய விவகாரங்களுக்கான அமைச்சர் மட்டுமே அத்தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெளிவுப்படுத்தியிருக்கின்றார்.
இந்நிலையில், அவருடன் சேர்ந்த அண்மைய சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த இதர அமைச்சர்கள் அனைவரும் கட்டாய தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
மூன்றாம் கட்ட பரவல்!
நாடு தற்போது மூன்றாம் கட்ட COVID-19 பரவலை எதிர்நோக்கியிருக்கின்றது.
வரக்கூடிய வாரங்களில் சபாவுடன் தொடர்புடைய கொரோனா சம்பவங்கள் இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சகாதார துறை தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah கூறியிருக்கின்றார்.
"Kita masih menjalankan, aktiviti aktiviti, peperangan yang telah kita jalankan di negeri Sabah contohnya melihat pengesanan kes iaitu dalam komuniti dan sebagainya apa yang apsti kita harapkan kita dapat melandaikan lengkok iaitu pertambahan kes kes di Sabah."
அக்கோறனி நச்சில் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் பொது மக்களை கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில், நாட்டில் ஐந்து புதிய cluster-கள் உருவாகியுள்ளன.
அதில் ஒன்று KL-லில் Jalan Pantai cluster ஆகும்; எஞ்சிய 4 cluster-கள் சபா, சரவாக் மற்றும் Labuan-னை உட்படுத்தியிருக்கின்றன.
ஆகக் கடைசியாக 375 COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, நால்வர் அத்தொற்றினால் உயிரிழந்தனர்.
அப்பெருந்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை மூவாயிரத்து 351ஆக அதிகரித்துள்ளது.
Bangsar-ரில் ஆரம்பப் பள்ளியில் COVID-19 தொற்று!
KL Bangsar-ரில், ஆரம்பப் பள்ளியொன்றைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்றைய மாலை நேர வகுப்புகள் ரத்துச் செய்ப்பட்டன.
எனினும், பள்ளி இன்னும் முழுமையாக மூடப்படவில்லை.
அண்மையில் உறவினர் திருமணத்திற்குச் சென்று வந்ததை அடுத்து அவர்களுக்கு அத்தொற்று ஏற்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
உலக மனநல விழிப்புணர்வு தினம்!
COVID-19 பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, பெரும்பாலானோரின் மனநலத்தை மிகவும் பாதித்துள்ளது.
இதனால் இக்காலக்கட்டத்தில் பலர் பதற்றத்திலும், மன அழுத்தத்திலும் இருந்து வருவதாக மருத்துவ உளவியலாளர் Dr நிவாஷினி மோகன் கூறுகின்றார்.
"we have recently seen a spike in Covid-19 cases in Msia, the past few days have been quite alarming, for most people fear and and anxiety about a disease and what could happened could be very overwhelming and it also can cause strong emotions in adults and also children actions that we takecan also make people, more isolated and lonely. "
நாளை அனுசரிக்கப்படும் உலக மனநல விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அவர் பேசினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather