← Back to list
தொடர்ந்து மூன்றிலக்கம்!
Oct 07, 2020
நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றிலக்கமாக இருக்கிறது.
புதிதாக 489 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 487 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியவை.
சபாவில் மிக அதிகமாக 282 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அடுத்து கெடாவில் 153 சம்பவங்களும் சிலாங்கூரில் 20 சம்பவங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மொத்த மரண எண்ணிக்கை 141 ஆகவே உள்ளது.
சிலாங்கூர், கிள்ளான், சபாவில் Tuaran, Sandakan, Papar ஆகிய பகுதிகளில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படுகிறது.
நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையில் இருந்து அது அமலுக்கு வருவதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
அதே சமயம் அப்பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்ல ஒரு வீட்டில் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் அமைச்சர் சொன்னார்.
மற்றொரு நிலவரத்தில், சிலாங்கூர், கிள்ளானில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வருவதை கவனத்தில் கொள்வதாக அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
அதன் தொடர்பில் தேசிய பாதிகாப்பு மன்றத்துடன் விரிவாக விவாதிக்கப்படும் என menteri besar தெரிவித்தார்.
மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 357 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 320 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டு 32 பேர் தடுத்து வைக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சு கூறியது.
பிரதமர் Tan Sri Muhyiddin Yassin, Covid-19னுக்கான கண்காணிப்பு வளையம் அணியாமல் சுகாதார அமைச்சின் உத்தரவை மீறியிருப்பதாகக் கூறப்படுவதை பிரதமர் துறை அலுவலகம் மறுத்துள்ளது.
அவருக்கு அக்கைவளையம் கொடுக்கப்படவில்லை.
மாறாக அவர் இரு வாரங்களுக்கு தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ள மட்டுமே ஆலோசனை கூறப்பட்டதாக அது தெளிவுபடுத்தியது.
நேற்று சிறப்பு உரையின் போது அவர் இளஞ்சிவப்பு கைவளையம் அணியாததைச் சுட்டிக் காட்டி சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது தொடர்பில் அது அவ்விளக்கத்தை வழங்கியது.
பள்ளிகளை மூடுவதா இல்லையா என்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் முடிவுக்காகக் காத்திருக்குமாறு தேசிய பெற்றோர், ஆசிரியர் சங்க நல்லிணக்க மன்றம் பெற்றோர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
தற்போதைக்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் பள்ளிகளில் போதனைகள் வழக்கம் போல் இருப்பதாகவும் அது கூறியது.
Covid-19 சம்பவங்கள் அதிகமாகப் பதிவாகி வரும் நிலையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பத் தயங்கி வருவது குறித்து PIBGN அவ்வாறு தெரிவித்தது.
ஜொகூர், கூலாய் அருகே Covid-19 பரவலால் பள்ளியொன்று மூடப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை மாநில கல்வித்துறை மறுத்துள்ளது.
அத்தகவல் உண்மையில்லை என அது தெளிவுபடுத்தியது.
நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீண்டும் அமல்படுத்தாத அரசாங்கத்தின் முடிவை தேசிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கம் வரவேற்றுள்ளது.
எனினும் வங்கிக் கடன்களுக்கான தவணைப் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் சலுகைக் காலத்தை நீட்டிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என அது கேட்டுக் கொண்டது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather