← Back to list
பிரதமர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்!
Oct 06, 2020
கடந்த வாரம் சனிக்கிழமை COVID-19 மீதான சிறப்புக் கூட்டத்திற்கு தலைமையேற்ற பிரதமர் Tan Sri Muhyiddin Yassin உட்பட, அக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட மேலும் பலர் தங்களை சுயமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
அக்கூட்டத்திற்குச் சென்றிருந்த பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் Datuk Seri Dr Zulkifli Mohamad Al-Bakri-க்கு கொரோனா தொற்று உறுதியானதே அதற்கு காரணம்.
இதையடுத்து, தேசிய காவல் படைத் தலைவர் Tan Sri Abdul Hamid Bador, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob, ஆகியோரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
சபாவுக்குள் நுழைய தடை!
இன்று நள்ளிரவு தொடங்கி, சபா மாநிலத்தவர்கள் மற்றும் குடிநுழைவுத் துறையின் நிரந்த அட்டை வைத்திருப்பவர்கள் தவிர்த்து, வேறு யாரும் அம்மாநிலத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது.
COVID-19 பரவல் மோசமடைந்துள்ள சபாவில், நாளை தொடங்கி Kota Kinabalu, Penampang மற்றும் Putatan ஆகியப் பகுதிகளில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படவிருப்பதே அதற்கு காரணம்.
அப்பகுதிகளில் உள்ள பொது மற்றும் தனியார் உயர்கல்விக் கூடங்கள், பாலர் பள்ளிகள், பள்ளிவாசல் என எதிலும், எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்படுகிறது.
Trump மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்!
COVID-19 தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வந்த அமெரிக்க அதிபர் Donald Trump, 3 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியேறியிருக்கின்றார்.
சிகிச்சையின் போது, Trump-புக்கு இருமுறை கூடுதல் oxygen வழங்கப்பட்டதாக கூறிய அவரது மருத்துவக் குழு, எனினும், தற்போது அவருக்கு எந்த சுவாசப் பிரச்னைகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.
ஒத்தி வைப்பு!
நாளை தொடங்கி, வீடு வீடாகச் சென்று, நேரில் மேற்கொள்ளப்படவிருந்த 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில், COVID-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிரித்து வருவதை அடுத்து, அந்த 2ஆம் கட்ட கணக்கெடுப்பு அடுத்தாண்டு, ஜனவரி 20ஆம் தேதி முதல் பிப்ரவரி ஆறாம் தேதி வரை நடத்தப்படும் என, பிரதமர் துறை தெரிவித்துள்ளது.
இவ்வேளையில், முதல் கட்டமாக மின்னியல் மற்றும் தொலைப்பேசி அழைப்புகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு, நாளை முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரைக்கும் நீடிக்கும் என்றும் அத்துறை கூறியது.
அக்காலக்கட்டத்தில், கணக்கெடுப்பு பாரங்களை இன்னும் பூர்த்திச் செய்யாதவர்கள், புள்ளிவிவரத் துறையின் அகப்பக்கத்திற்குச் சென்று, அதனை நிரப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதன் வழி, வீடு வீடாகச் சென்று நேரடியாக மேற்கொள்ளப்படும் நேர்காணல்களின் எண்ணிக்கையை குறைத்து, அதன் வழி, COVID-19 பரவல் அபாயத்தையும் தடுக்க முடியும் என அத்துறை தெரிவித்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather