← Back to list
பள்ளிகளுக்கு அழுத்தம் தர வேண்டாம் - NUTP வலியுறுத்தல்!
Oct 08, 2020
நாட்டில் COVID-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, அதிகமான மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் சூழ்நிலையை தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் NUTP அறிந்து வைத்துள்ளது.
இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என கூறுகின்றார், அச்சங்கத்தின் தலைவர் Aminuddin Awang.
மாணவர்கள் வீட்டில் இருந்தப்படியே இணையம் வாயிலாகவோ அல்லது தங்களது வசதிக்கேற்ப கற்றலை மேற்கொள்வதை பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
கொரோனா பெருந்தொற்றின் சீற்றம் அதிகம் உள்ள இச்சமயத்தில், பள்ளி மாணவர் வருகை விவகாரம் குறித்து பள்ளி நிர்வாகங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் NUTP, கல்வி அமைச்சும், மாநில கல்வித் துறை உள்ளிட்ட தரப்பினரை கேட்டுக் கொண்டது.
இவ்வேளையில், சிலாங்கூர் கிள்ளானிலும், சபாவில் Sandakan, Papar மற்றும் Tuaran-னில் உள்ள மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 384 அதிகமான பள்ளிகள் இன்று தொடங்கி அக்டோபர் 23ஆம் தேதி வரை மூடப்படுகின்றன.
அது, அரசு மற்றும் தனியார், ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளையும் உட்படுத்தியிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, சிவப்பு மண்டலங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், தங்களது SPM பரீட்சார்த்த தேர்வு குறித்து கவலைப்படத் தேவையில்லை.
Trial தேர்வுக்கு தயாராகி வரும் பாதிக்கப்பட்ட பள்ளிகள், தேதிகளை மறு அட்டவணை இட்டுக் கொள்ளலாம் என கல்வி அமைச்சு கூறியிருக்கின்றது.
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்!
நாட்டில் மீண்டும் தீவிரமடைந்துள்ள COVID-19 பெருந்தொற்றுப் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என மலேசிய பொது சுகாதார மருத்துவர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அதற்கு முக்கியமாக கையாளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து விவரிக்கின்றார், அச்சங்கத் தலைவர் Datuk Dr Zainal Ariffin Omar..
"memangil semua mereka yang pulang dari Sabah semasa proses PRN yang lalu, dan mengarahkan mereka mengambil ujian dan terus mengadakan quarantine mandatori selama 14 hari sebelum mereka dibenarkan untuk bekerja atau menjalankan urusan harian."
நாட்டில் அத்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்க, கடந்த மாதம் சபாவில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலும் ஒரு காரணம் என பிரதமர் அண்மையில் கூறியிருந்தார்.
பூச்சோங்கில் புதிய cluster!
சிலாங்கூர் பூச்சோங்கில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவரை அவரது உறவினர்கள் நேரில் சென்று சந்தித்ததை அடுத்து, அம்மாநிலத்திலும், பேராக்கிலும் புதிய clusterகள் உருவாகியுள்ளன.
Bah Puchong எனும் clusterருடன் தொடர்புடையவர், அண்மையில் சபாவுக்குச் சென்று திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் புதிதாக 489 கொரோனா சம்பவங்கள் பதிவான வேளை, அப்பெருந்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை மூவாயிரத்து 351ஆக அதிகரித்துள்ளது.
Azmin Ali விளக்கம்!
தனக்கு கொரோனா தொற்றுப் பீடித்திருப்பதாக வெளியாகியுள்ள தகவலை மத்திய அமைச்சர் Datuk Seri Mohamed Azmin Ali மறுத்துள்ளார்.
தனக்கு அத்தொற்று இல்லை என்பது, இருமுறை மேற்கொண்ட பரிசோதனைகள் வழி தெரிய வந்திருப்பதாக அவர் சொன்னார்.
சபா தேர்தல் முடிந்து திரும்பியதில் இருந்து Azmin-னை காண முடிவதில்லை என்பதை மேற்கோள் காட்டி முன்னதாக அவ்வதந்திகள் பரவின.
ஆயினும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
நீர் விநியோகம் 92% சீரடைந்தது!
கிள்ளான் பள்ளத்தாக்கில், காலை 6 மணி வரைக்குமான நிலவரப்படி, தண்ணீர் விநியோகம் ஏறக்குறைய 92 விழுக்காடு சீரடைந்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather