← Back to list
KITA PRIHATIN கூடுதல் உதவித் திட்டம் - மக்களின் பொருளாதார சுமையைக் குறைக்கும்!
Sep 25, 2020
KITA PRIHATIN கூடுதல் உதவித் திட்டத்தை அறிவித்துள்ள அரசாங்கத்தின் நடவடிக்கையை DHRRA Malaysia பெரிதும் வரவேற்றுள்ளது!
COVID-19 சீற்றத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இத்திட்டம் நிச்சயம் நிம்மதி பெருமூச்சு அளிக்கும் என அந்த அரசு சாரா அமைப்பைச் சேர்ந்த சரவணன் தெரிவித்தார்.
இவ்வேளையில், அத்திட்டத்தின் கீழ் அரசாங்கம் அறிவித்துள்ள உதவிகளை பெறுவதில் சிக்கல்களை எதிர்நோக்குபவர்கள், குறிப்பாக தனித்து வாழும் தாய்மார்கள், தங்களிடம் ஆலோசனைப் பெறலாம் என்றும் அவர் கூறினார்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட தனித்து வாழும் தாய்மார்களுக்கு இதற்கு முன் அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவிய DHRRA Malaysia, மன நல ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.
தற்போது, அத்தரப்பினர் பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டு வர ஏதுவாக DHRRA Malaysia பல பயிற்சிகளையும் நடத்தி வருவதாக சரவணன் தெரிவித்தார்.
இவ்வேளையில், KITA PRIHATIN கூடுதல் உதவித் திட்டத்தின் கீழ், மைக்ரோ வணிகர்களுக்காக அரசாங்கம் Geran Khas Prihatin 2.0-வுக்கான விண்ணப்பங்களை மீண்டும் திறந்திருப்பது காலத்திற்கு ஏற்ற ஒன்று என, மலேசிய இளைஞர் மன்றம் கருதுகின்றது!
அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை வரவேற்ற அம்மன்றத்தின் தலைவர் Jufitri Joha, COVID-19 பெருந்தொற்றுக் காரணமாக வேலை இழந்து, சிறுத் தொழில்களில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
குறிப்பாக, சிறுதொழில்களில் ஈடுப்பட்டுள்ள இளைஞர்கள் தொடர்ந்து வருமானம் ஈட்டவும், தங்களது பொருளாதாரத்தை சீராக்கிக் கொள்ளவும் இது வாய்ப்பளிக்கின்றது என்றாரவர்.
மைக்ரோ வணிகர்கள், இந்த Geran Khas Prihatin-னுக்கு, அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசாங்கம் கூறியுள்ளது.
இதன் வழி, 2 லட்சத்திற்கும் அதிகமான வணிகர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு நிலவரத்தில், COVID-19 சீற்றத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு உதவ ஏதுவாக, KITA PRIHATIN கூடுதல் உதவித் திட்டத்தின் கீழ், சம்பள உதவித் தொகைத் திட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பதை மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனம் MEF வரவேற்றுள்ளது.
இதன் வழி, முதலாளிகள், தங்களது தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யும் சாத்தியங்கள் குறைக்கப்பட்டிருப்பதாக MEF நிர்வாக இயக்குநர் Datuk Shamsuddin Bardan கூறுகின்றார்.
"subsidi upah yang diperkenalkan sehingga Disember 2020, adalah amat penting untuk menstabilkan keadaan pasaran buruh dan juga menggalakkjan majikan untuk tidak membuang pekerja pada masa ini."
பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கி இத்திட்டத்தின் கீழ் உதவிப் பெற விண்ணப்பிக்கலாம்.
கடந்தாண்டுடன் ஒப்பிடுக்கையில், இவ்வாண்டு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக் கட்டத்தில், ஏறக்குறைய 30 விழுக்காடு வருமானம் பாதிக்கப்பட்டுள்ள முதலாளிகளுக்கு இந்த உதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் 1.3 மில்லியன் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முடிவில் இப்போதைக்கு மாற்றம் இல்லை!
COVID-19 சம்பவங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற போதிலும், அடுத்த மாதம் தொடங்கி நாடு முழுவதும் மாணவர்கள் தத்தம் உயர்கல்விக் கழகங்களுக்கு திரும்பும் முடிவில் மாற்றமில்லை!
மாணவர்களுக்காக பொதுப் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தேவையான SOP-களை தயார் செய்து விட்டதால், அம்முடிவை மாற்றும் எண்ணம் இல்லை என உயர்கல்வி அமைச்சு கூறியிருக்கின்றது.
SP Bala கவலைக்கிடம்!
COVID-19 கிருமித் தொற்றுக் காரணமாக சென்னையில் சிகிச்சைப் பெற்று வரும் பின்னணிப் பாடகர் SP பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கின்றது.
ஆகஸ்ட் 5ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட SP பாலாவின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசமடைந்ததாகவும், இதையடுத்து அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் வாயிலாக அதிகப்பட்ச உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அம்மருத்துவமனை கூறியுள்ளது.
இத்தகவலை அடுத்து, SP Bala உடல் நலம் பெற வேண்டி, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் Twitter-ரில் தங்களது எதிர்பார்ப்புகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather