Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

பாதுகாப்பு குறித்த அடிப்படை தகவல்களை அறிந்து வைத்திருத்தல் அவசியம்!

Sep 19, 2020


தங்களது சொந்தப் பாதுகாப்பை உறுதிச் செய்ய மாணவர்கள் சில அடிப்படை பாதுகாப்பு நடைமுறைகளை அறிந்து வைத்திருக்க வேண்டும் என, சமூக ஆர்வலர் Tan Sri Lee Lam Thye வலியுறுத்தியுள்ளார்.

பினாங்கில், காரில் carbon monoxide வாயுவை சுவாசித்து, அதனால் சுயநினைவை இழந்து மூன்று கல்லூரி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து, The Alliance for Safe Community அமைப்பின் தலைவருமான Tan Sri Lee Lam Thye பேசினார்; அதில் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு மாணவி தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பேசிய Tan Sri Lee Lam Thye, ஒருவேளை, Carbon Monoxide வாயு ஆபத்து குறித்து அம்மாணவிகள் முன் கூட்டியே அறிந்து வைத்திருந்தால், இந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்றாரவர்.

இத்துயரச் சம்பவம், தனிமனிதப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான அவசியத்தை மீண்டும் நமக்கு உணர்த்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக மாணவர்கள், தங்களுக்கு ஆபத்தைக் கொண்டு வரக்கூடிய சூழ்நிலைகளை தவிர்க்க இந்த விழிப்புணர்வு உதவும் என்றும் Tan Sri Lee Lam Thye தெரிவித்தார்.

எனவே, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார திட்டம் வாயிலாக, மாணவர்களுக்கு அந்த விழிப்புணர்வு இயக்கங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அது ஒரு தொடர் திட்டமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

ஓடும் அல்லது நிறுத்தி வைக்கப்படும் கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டிய அம்சங்கள் பற்றி, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு போதுமான தகவல்களை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

Wristband-டுகள் பல நிறங்களில் இருக்கும்!

COVID-19 தொடர்பில் கட்டாயமாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியவர்களுக்கு வழங்கப்படும் wristband-டுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் மட்டும் இருக்காது!

மாறாக, கை மணிக்கப்பட்டில் அணியப்படும் அந்த wristband-டுகள் இதர பல நிறங்களிலும் இருப்பதாக சுகாதார துறை தலைமை இயக்குநர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

வெள்ளை, மஞ்சள், நீலம், சிவப்பு என அவை பல நிறங்களில் இருப்பதாக, அவர் கூறினார்; 

சம்பந்தப்பட்டோரின் பகுதிகளில் அந்த wristband-டுகளின் கையிருப்பொ பொறுத்து, மாநில சுகாதார அதிகாரிகள் அதன் பயன்பாட்டை தீர்மானிப்பார்கள் என்றாரவர்.

அவ்வகை wristband-டுகளை அணிந்துக் கொண்டு, பொது இடங்களில் நடமாடும் நபர்கள் குறித்து தகவல் அளிக்குமாறு அவர் பொது மக்களை வலியுறுத்தியிருக்கின்றார்.

இவ்வேளையில், நாட்டில் புதிதாக 95 COVID19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன; அவற்றில் அதிகமான சம்பவங்கள் சபா Benteng cluster தொடர்புடையவை.

இன்னும் 754 பேர் அப்பெருந்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

COVID-19 பரிசோதனை கட்டாயம்!

சபாவில் இருந்து சரவாக்கிற்குள் நுழையும் அந்நிய நாட்டினர் உட்பட அனைத்து நபர்களும், கட்டாயம் COVID-19 பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்!

பயணத்தை தொடங்க மூன்று நாட்களுக்கு முன்பாகவே அவர்கள் அப்பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என, சரவாக் மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவர்கள் இணையம் வழி அதற்கான பாரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை திங்கட்கிழமை தொடங்கி அமுலுக்கு வருகின்றது.

அமெரிக்காவில் தடை!

அமெரிக்காவில் TikTok மற்றும் WeChat செயலிகளை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்கப்படுகின்றது; அத்தடை நாளை இரவு தொடங்கி நடப்புக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அச்செயலிகள் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு மருட்டலாக இருப்பதாக அதிபர் Donald Trump கூறியிருக்கின்றார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather