← Back to list
நாட்டில் புதிய Cluster சம்பவம்!
Sep 15, 2020
சபா, Kunakக்கில் Covid-19 தொடர்பில் புதிய cluster அடையாளம் காணப்பட்டுள்ளது.
அச்சம்பவங்களையும் சேர்த்து 13 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியிருப்பதாக அவர் சொன்னார்.
மொத்தமாக புதிதாக 23 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் அறுவர் அக்கிருமித் தொற்றில் இருந்து விடுபட்டு பூரண நலமடைந்துள்ளனர்.
மரண எண்ணிக்கை 128 ஆகவே உள்ளது.
கெடாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள Kota Setarரில் இதுவரை 12 ஆயிரத்து 885 பேருக்கு Covid-19 தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ளவர்களுக்கும் அப்பரிசோதனை தொடர்ந்து செய்யப்படும்.
Kota Setarரில் இம்மாதம் 25 ஆம் தேதி வரை EMCO அமலில் இருக்கும்.
வெளிநாடுகளில் தங்களது மேல் படிப்பை மேற்கொள்ளச் செல்லும் மலேசிய மாணவர்கள், முன் கூட்டியே அதற்கான அனுமதி கடிதத்தை குடிநுழைவுத்துறையிடம் இருந்து பெற வேண்டிய அவசியம் இல்லை.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் புறப்படும் முன் அதற்கான ஆதாரத்தை மட்டும் காட்டினால் போதுமானது என தற்காப்பு அமைச்சு கூறியிருக்கிறது.
புதிய மாணவர்கள் தங்களுக்குக் கிடைத்த அழைப்புக் கடிதத்தையும் இன்னும் படிப்பைத் தொடரும் மாணவர்கள் தங்களது மாணவர் அட்டையையும் காண்பிக்கலாம்.
வட மலேசிய பல்கலைக்கழகமான UUM 2020/2021 ஆம் தவணைக்கான புதிய மாணவர்கள் நுழைவுப் பதிவை அக்டோபர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளுக்கு ஒத்தி வைத்துள்ளது.
முன்னதாக அப்பதிவை அக்டோபர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடத்த அட்டவணையிடப்பட்டிருந்தது.
பிரதமர் Tan Sri Muhyiddin Yassin, நாட்டின் Covid-19 நிலவரம் குறித்து இன்றிரவு சிறப்பு உரை நிகழ்த்தவிருக்கிறார்.
அதனை Astro Awani 501 ஆவது ஒளியலையில் இரவு 8 மணிக்கு நேரடியாகக் காணலாம்.
உணவகங்களில் புகைப்பிடிக்கும் சம்பவங்களைத் தவிர்ப்பதில் பொது மக்களின் பங்கும் அவசியம்!
Covid-19-னைக் காரணம் காட்டி அத்தடையை அமுல்படுத்தத் தவறும் சில உணவகங்களுக்கு, அத்தடையின் அவசியத்தை உணர வைக்க பொது மக்கள் அவ்வுணவகங்களுக்குச் செல்லக் கூடாது என்கிறார் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முத்துசாமி திருமேனி.
எனவே தான் உணவக நடத்துனர்கள் மத்தியில் விழிப்புணர்வு இருக்கும் என்றாரவர்.
Covid-19 காலகட்டத்தில் SOPக்களுக்கும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம், சிகரட் புகைக்க விதிக்கப்பட்ட தடைக்கும் அளிக்கப்படுகின்றதா என கேட்கப்பட்ட போது, முத்துசாமி ராகா செய்தி பிரிவிடம் அவ்வாறு விளக்கமளித்தார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather