Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

இரவு நேர கேளிக்கை மைய உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

Sep 15, 2020


மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறும் இரவு நேர கேளிக்கை மைய உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, அமுலாக்கத் தரப்பினர் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

அம்மையங்களை மீண்டும் செயல்பட அனுமதிப்பது தொடர்பில், இன்னும் எந்த கலந்தாலோசனைகளும் நடைபெறவில்லை என பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.
 
"tak boleh buka langsung, arahan kita tak boleh buka langsung. sebab itu hari hari beratus kadang-kadang tangkapan banyak berlaku di kelab malam dan sebagainya. dan saya dah minta kepada pihak PBT, pihak berkuasa tempatan, kalau mereka mempunyai lesen, tarik balik lesen mereka dan tutup perniagaan mereka."

அம்மையங்களை உட்படுத்தி பதிவாகும் SOP விதிமீறல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து அவர் அதனை தெரிவித்தார்.

ஆகக் கடைசியாக, RMCO விதிமுறைகளை மீறியது தொடர்பில் 763 பேர் கைதாகியுள்ளனர்; 

அவர்களில் ஏறக்குறைய 608 பேரின் கைது, இரவு நேர கேளிக்கை மையங்களை உட்படுத்தியிருப்பதாக Datuk Seri Ismail Sabri Yaakob கூறினார்.
 

SOP-களை தொடர்ந்து பின்பற்றுங்கள் - MMA வலியுறுத்து!

COVID-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்த பல மாதங்களாக போராடி வரும் மருத்துவ முன் வரிசைப் பணியாளர்கள், தொடர்ந்து SOP-களைப் பின்பற்றி வருவார்கள் என மலேசிய மருத்துவச் சங்கத் தலைவர் DR N ஞானபாஸ்கரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

சில சமயங்களில் முன்வரிசைப் பணிகளை முடித்து வீடு திரும்புவோர், SOP-களை பின்பற்றுவதில் தற்செயலாக நடந்துக் கொள்ள வாய்ப்புண்டு என்றாலும், குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் நலன் கருதி, அவர்கள் அவ்விஷயத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் DR ஞானபாஸ்கரன் கூறினார்.

முன்னதாக, Sungai cluster-ரைச் சேர்ந்த முன் வரிசைப் பணியாளர் ஒருவர் SOP-யை மீறியதால், அவரும், ஏழு குடும்ப உறுப்பினர்களும் COVID-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்து கேட்ட போது, அவர் அக்கருத்துகளை பகிர்ந்துக் கொண்டார்.

மற்றொரு நிலவரத்தில், நாட்டில் புதிதாக 31 COVID-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன; இன்னும் ஏறக்குறை 615 பேர் அப்பெருந்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

PN பதிவுப் பெற்று விட்டது - RoS தகவல்!

Perikatan Nasional அல்லது தேசியக் கூட்டணி, ஆகஸ்ட் ஏழாம் தேதியே முறைப்படி பதிவுப் பெற்று விட்டதாக, சங்கங்களின் பதிவிலாகா RoS உறுதிப்படுத்தியிருக்கின்றது.

எனினும், தங்களது இணைய அகப்பக்கத்தில், இரு மாதங்களுக்கு ஒரு முறை தகவல்கள் தானாக சரிபார்க்கப்படும் என்பதால், PN பதிவு குறித்த தகவல்கள் அடுத்த மாதத் தொடக்கத்தில் தான் அகப்பத்தில் இடம்பெறும் என்றும் RoS கூறியுள்ளது.

Perikatan Nasional இன்னும் முறைப்படி பதிவாகவில்லை என எதிர்கட்சிகள்  புகார் கூறியதை அடுத்து, RoS விளக்கமளித்தது.
 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather