← Back to list
மூன்றாவது நாளாக ஈரிலக்கத்தில் உள்ளது Covid-19!
Sep 14, 2020
நாட்டில் Covid-19 தொடர்பில் பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக ஈரிலக்க எண்ணிலேயே உள்ளது.
புதிதாக 31 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 28 உள்நாட்டில் பரவியவை.
அச்சம்பவங்களில் மிக அதிகமாக 25, சபா மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
மேலும் எழுவர் அக்கிருமித் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
மொத்த மரண எண்ணிக்கை 128 ஆகவே இருக்கிறது.
சபா மாநிலம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே அங்கிருந்து வருவோருக்கு கட்டாய தனிமைப்படுத்தல் உத்தரவு வெளியிடப்படும்.
தற்காப்பு அமைச்சு அவ்வாறு தெரிவித்திருக்கிறது.
இதனிடையே மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள இக்காலக் கட்டத்தில் இரவு கேளிக்கை விடுதிகளும் மனமகிழ் மையங்களும் மீண்டும் செயல்பட இன்னும் அனுமதியில்லை என அது கூறியது.
சுற்றுச் சூழல் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களைக் கையாள அரசாங்கம் சிறப்புப் பணிக்குழுவை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக தூய்மைக்கேட்டுச் சம்பவங்கள் நாட்டின் நீர் நிலைகளைப் பாதிப்பதைத் தொடர்ந்து அக்குழுவை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச் சூழல், நீர் வள அமைச்சு தெரிவித்தது.
அண்மையில் Sungai Gong ஆற்று நீர் மாசடைந்ததன் காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கில் சுமார் ஆயிரத்து 300 இடங்களில் நீர் விநியோகம் தடைபட்டதை அது சுட்டிக் காட்டியது.
இதனிடையே அத்தூய்மைக்கேட்டுச் சம்பவம் மீதான விசாரணை அறிக்கை தேசிய சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக அமைச்சு கூறியது.
ஜொகூரில் 177 பள்ளி மாணவர்கள் போதைப் பொருள் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்கப்படும் என மாநில காவல் துறை தெரிவித்திருக்கிறது.
இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து ஜொகூரில் இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் 177 பேர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்ததாக முன்னதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு மன்றம் கூறியிருந்தது.
சிலாங்கூர், Kajangங்கில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் காவல் துறை விசாரணைக்கு உதவ ஐவரைத் தேடி வருகிறது.
பேரா, Kuala Kangsarரில் வெள்ளம் சீரடைந்துள்ளதை அடுத்து அங்கு திறக்கப்பட்டிருந்த மூன்று துயர் துடைப்பு மையங்கள் மூடப்பட்டு அவற்றில் இருந்த 62 பேர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
Kerianனில் 75 பேரும் Kuala Selangorரில் 20 பேரும் நிவாரண மையங்களில் உள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather