← Back to list
SOP-களை பின்பற்றுங்கள்! கெடா ஆட்சிக் குழு உறுப்பினர் வலியுறுத்தல்!
Sep 14, 2020
கெடா Amanjaya-வில், Kenanga மற்றும் Mawar பகுதிகளுக்கான கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ள நிலையில், Melur பகுதிக்கான உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக, தற்காப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 2ஆவது COVID-19 பரிசோதனையில் புதிதாக 12 சம்பவங்கள் பதிவாகியிருப்பதே அதற்கு காரணம்.
இக்கால நீட்டிப்பு, ஈராயிரத்து 500க்கும் அதிகமான மக்களை உட்படுத்தியிருப்பதாக அமைச்சு தெரிவித்தது.
கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் உள்ள கெடா Kota Setar மக்கள் அரசாங்கம் நிர்ணயித்துள்ள SOP-களை தொடர்ந்து பின்பற்றுவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக, மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Datuk Dr Mohd Hayati Othman கூறியுள்ளார்.
Datuk Dr Mohd Hayati Othman (Image: kedahgazette.com)
"Saya juga berharap kepafda mereka ini supaya mematuhi arahan yang telah dikeluarkan, kerana pihak KKM, saya dimaklumkan akan mengadakan screening dari 15 hingga 20 ribu mereka yang berada di Kawasan tersebut, terutama sekali mereka yang ada kontak. Jadi harap mereka bersabar di Kawasan tersebut kerana bukan sahaja kita menhadapi masalah dari segi COVID-19 tetapi ada juga Kawasan-kawasan yang ditenggalami air dengan hujan lebat"
முன்வரிசைப் பணியாளர்களுக்கு அவர் இந்த ஆலோசனையை வழங்கினார்.
"Frontliner yang menjalankan screening patuhilah segala arahan yang ditetapkan; Kita berdoa semoga Allah wata'alla segera mengangkat musibah COVID-19 daripada Kawasan kita''
முன்னதாக, Sungai cluster-ரைச் சேர்ந்த முன் வரிசைப் பணியாளர் ஒருவர் SOP-யை மீறியதால், அவரும், ஏழு குடும்ப உறுப்பினர்களும் COVID-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட சம்பவத்தை அவர் மேற்கோள் காட்டி பேசினார்.
உணவக உரிமையாளர் சங்கங்கள் வரவேற்பு!
உணவகங்கள் மற்றும் பலசரக்குக் கடைகளை அதிகாலை 2 மணி வரை திறந்திருக்க, அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதியை உணவக உரிமையாளர் சங்கங்கள் வரவேற்றுள்ளன.
அதன் தொடர்பில் பேசிய, இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முத்துசாமி திருமேனி...
"கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றால் உணவக நடத்துநர்கள் இழந்த வருமானத்தை மீட்டெடுக்க, இந்த 2 மணி நேர நீட்டிப்பு உதவியாக இருக்கும் என்றே நம்புகிறேன்" என தெரிவித்தார்.
உணவகங்களுக்குச் செல்லக் கூடிய வாடிக்கையாளர்கள் மத்தியில் SOP-யைப் பின்பற்றுவதற்கான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இவ்வேளையில், உணவகங்கள் SOP-களைப் பின்பற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தும் என்பதே தனது எதிர்ப்பார்ப்பும் என, மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் Datuk Jawahar Ali கூறியிருக்கின்றார்.
இதற்கு முன், நள்ளிரவு 12 மணி வரை மட்டுமே உணவகங்கள் திறந்திருக்க முடியும் என கூறியிருந்த DBKL, மத்திய அரசாங்கத்தின் முடிவைப் பின்பற்றி, இன்று தொடங்கி உணவகங்கள் அதிகாலை 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தது.
அதிகமான தொகுதிகளில் PAS போட்டி!
15ஆவதுப் பொதுத் தேர்தலில், கெடா, Kelantan மற்றும் Terengganu-வில், அதிகமான தொகுதிகளில் PAS போட்டியிடும் என்பதை அக்கட்சி உறுதிப்படுத்தியிருக்கின்றது.
அதன் தொடர்பில், தேசிய முன்னணி மற்றும் BERSATU-வுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சு வார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாக PAS கூறியது.
PN-னில் இணைய GERAKAN விருப்பம்!
இதனிடையே, Perikatan Nasional கூட்டணியில் இணைய விரும்புவதாக தேசிய முன்னணி முன்னாள் உறுப்புக் கட்சியான GERAKAN, பிரதமர் Tan Sri Muhyiddin Yassin-னிடம் தெரிவித்துள்ளது.
14-வது பொதுத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகு தேசிய முன்னணியில் இருந்து வெளியேறிய GERAKAN இதுநாள் வரை தனியாக செயல்பட்டு வருகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather