Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சட்டவிரோத தொழிற்சாலைகளுக்கு கடைசி வாய்ப்பு! MB எச்சரிக்கை!

Sep 10, 2020


சிலாங்கூரில் முறையான உரிமம் வைத்திருக்காத தொழிற்சாலைகள் மற்றும் நில உரிமையாளர்கள், முறைப்படி உரிமம் பெற்றுக் கொள்ள இவ்வாண்டு இறுதி வரை வாய்ப்பு வழங்கப்படும்!

குறித்த காலத்திற்குள் உரிமம் பெறத் தவறுவோரின் கட்டிடங்கள் இடித்துத் தள்ளப்படும் என மாநில Menteri Besar Datuk Seri Amirudin Shari எச்சரித்துள்ளார்.

இதனிடையே, சிலாங்கூர் நீர் நிலைகளில் ஏற்படும் மாசுபாடுகளை கையாள மேற்கொள்ளப்படவுள்ள மாநில நீர் நிலைகள் தூய்மைக்கேடு மீதான அவசர செயற்குழு கூட்டத்திற்கு தாம் தலைமையேற்கப் போவதாகவும் Menteri Besar கூறியுள்ளார்.

"Kali ini kita akan gabungkan teknologi pemantauan sungai, pelaksanaan LUAS sebagai agensi oemantauan sumber sumber air dan juga usaha usaha perbandaran seperti pembersihan kawasan sungai ataupun pengosongan reserve reserve sungai yang dibangunkan oleh infrastrutur infrastruktur ataupun bangunan bangunan yang tidak mendapat pelepasan."

மற்றொரு நிலவரத்தில், தலைநகரில் நீர் விநியோகப் பிரச்னை ஏற்படுவதை தடுக்க, கூட்டரசுப் பிரதேசத்தில், நீர் நிர்வாக வாரியம் அமைக்கப்படும் என, கூட்டரசுப் பிரதேச அமைச்சர் Tan Sri Annuar Musa தெரிவித்துள்ளார்.

அதுவொரு நீண்ட கால தீர்வாக இருக்கும் எனக் கூறிய அமைச்சர் அப்பரிந்துரை அடுத்து வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்றார்.
 

20 சென் கட்டணமா? துணை அமைச்சரின் கூறுக்கு மறுப்பு!

இணையம் வழி பொருட்கள் வாங்கும் பயனர்களுக்கு 20 sen சேவைக் கட்டணம் விதிக்கும் பரிந்துரை தொடர்பில் இதுவரை எந்த கலந்தாய்வும் நடைபெறவில்லை! 

தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு அறிக்கை வழி அதனைத் தெரிவித்துள்ளது.

இணையம் வழி, ஆயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவான தொகையில் பொருட்கள் வாங்குவோருக்கு 20 சென் சேவைக் கட்டணம் விதிக்க ஆலோசிக்கப்படுகிறது;

அதில் இருந்து கிடைக்கும் தொகை தொடர்புத் துறை பாதுகாப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என அதன் துணை அமைச்சரே இதற்கு முன் கூறியிருந்தார்.

இதற்கு பொது மக்கள் மத்தியில் ஆட்சேபம் கிளம்பிய நிலையில், துணை அமைச்சரின் கூற்றை மறுத்து, அமைச்சு தற்போது அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

நாடு COVID-19 பெருந்தொற்றுப் பாதிப்பில் உள்ள இக்காலக்கட்டத்தில், சேவைக் கட்டணம் விதிக்கும் அப்பரிதுரை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை என இதற்கு முன் மலேசியப் பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளனம் FOMCA-வும் குரல் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

இன்று உலக தற்கொலை தடுப்புத் தினம்!

இதற்கு முன், அடிக்கடி தவிர்க்கப்படும் தலைப்புகளில் ஒன்றாக இருந்து வந்த தற்கொலை என்ற விவகாரம், தற்போது மக்கள் மத்தியில் பொதுவான ஒரு சம்பவமாக மாறியிருக்கின்றது!

அதற்கு பல காரணங்கள் கூறப்படும் நிலையில், ஒருவரிடத்தில் தற்கொலை எண்ணத்தை தடுக்க, நாம் எந்த மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றோம், அதனை எவ்வாறு வெளிப்படுத்துகின்றோம் என்பது முக்கியம் என கூறுகின்றார், பதிவுப்பெற்ற ஆலோசகர் Quek Ser Pin.

தற்கொலை எண்ணத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவ எண்ணினால், முதலில் அவர்களுக்கு நீண்ட நெடிய  அறிவுரைகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்; 

காரணம்  அத்தகைய அறிவுரைகளால், தாங்கள் மிகவும் பலவீனமானவர்கள் என பாதிக்கப்பட்டவர்கள் உணர வாய்ப்பிருப்பதாக அவர் கூறினார்.

அதே சமயம், தற்கொலை என்ற விவாதத்தை முற்றாக தவிர்க்கவும் கூடாது; அவ்வாறு செய்தால், உதவிக்காக காத்திருப்பவர்கள், தனக்கு அடுத்திருப்பவரை நாடிச் செல்ல தயக்கம் காட்டுவார்கள்; இது அவர்களது உயிருக்கே ஆபத்தாகி விடும் என்றும் அவர் சொன்னார்.

உலக தற்கொலை தடுப்புத் தினத்தை முன்னிட்டு அவர் இக்கருத்துகளை பகிர்ந்துக் கொண்டார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather