← Back to list
மன்னிப்புக் கேட்டார் Menteri Besar-ரின் மனைவி!
Sep 07, 2020
Air Selangor கொள்கல லாரி வாயிலாக தனது வீட்டு நீச்சல் குளத்திற்கு தண்ணீர் அனுப்பட்டதாக கூறப்படுவதை சிலாங்கூர் மாநில Menteri Besar-ரின் மனைவி மறுத்துள்ளார்.
சிலாங்கூர் மக்கள் தண்ணீர் பிரச்னையால் அவதியுற்று வரும் நிலையில், தனது வீட்டு வாசலில் நீர் கொள்கல லாரி ஒன்று நிற்கும் புகைப்படத்தையும், அதன் கூடவே வீட்டு நீச்சல் குளத்தின் புகைப்படத்தையும் அவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதை அடுத்து, பலரும் அவரை சாடத் தொடங்கினர்.
இதையடுத்து, மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படும் நேரத்தில் அப்படியொரு பதிவைச் செய்ததற்காக Menteri Besar-ரின் மனைவி மன்னிப்புக் கேட்டுள்ளார்.
ஏறக்குறைய 950 இடங்களில் தண்ணீர் விநியோகம் திரும்பியது!
கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏறக்குறைய தொள்ளாயிரத்து 48 இடங்களில் தண்ணீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியுள்ளது.
எஞ்சிய 481 இடங்களுக்கான தண்ணீர் விநியோகத்தை சீரடைய வைக்கும் பணிகளை Air Selangor தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
கடந்த வாரம், ரவாங் Sg Gong ஆற்று நீர் மாசடைந்ததை அடுத்து, வியாழக்கிழமை 4 நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டு, அதனால் கிள்ளான் பள்ளத்தாக்கில் ஆயிரத்து 200க்கும் அதிகமான இடங்களில் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டது.
இவ்வேளையில், தண்ணீர் விநியோகத் தடையை அடுத்து, நீர் பங்கீட்டு முறை அமுலுக்கு வரவிருப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலை Air Selangor நிறுவனம் மறுத்துள்ளது.
விளம்பரங்களை DBP முதலில் சரிபார்க்கும்!
KL-லில், விளம்பரப் பலகைகளைப் பொருத்த விரும்புவோர், அதில் இடம்பெறும் வாசகங்களை Dewan Bahasa dan Pustaka-வில் முதலில் சரிபார்க்க வேண்டும்; அதன் பிறகே அவற்றைப் பயன்படுத்த முடியும் என DBKL கூறியுள்ளது.
விளம்பரப் பலகைகளில், மலாய் மொழி முதன்மைப்படுத்தப்பட்டு, அதனுடன் வேறு மொழிகள் இணைக்கப்படுவதில் பிரச்னையில்லை என்றும் DBKL தெரிவித்தது.
அண்மையில் தலைநகரில் விளம்பரப் பலகையொன்றில், மலாய் மொழி முதன்மைப்படுத்தப்படாத விவகாரம் குறித்து DBKL பேசியது.
விதிமுறை மீறியதற்காக, சம்பந்தப்பட்ட தரப்பே அவ்விளம்பரப் பலகையை அப்புறப்படுத்தி விட்டது.
131 பேர் கைது!
மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக ஆகக் கடைசியாக 131 பேர் கைதாகியுள்ளனர்.
அவர்களில் 112 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்ட நிலையில், 17 பேர் தடுத்து வைக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.
சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளும் விதிமுறையை மீறிய இருவர் கைது செய்யப்பட்டிருப்பதையும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
சபா சட்டமன்றத் தேர்தல்!
சனிக்கிழமை நடைபெறவுள்ள சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள், தொகுதிப் பங்கீட்டில் மும்முரம் கட்டி வருகின்றன.
தேசிய முன்னணியும், Bersatu-வும், முறையே 30 மற்றும் 20 இடங்களில் போட்டியிட இணங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தங்களுக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளே ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள PKR, தொகுதிப் பங்கீடு நியாயமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது.
WARISAN, தனது வேட்பாளர் பட்டியலை வியாழக்கிழமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபா சட்டமன்றத் தேர்தல் செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather