Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நீர் மாசுபாடு: இரு மடங்கு அபராதம்!

Sep 06, 2020


தண்ணீர் மாசுபாட்டை ஏற்படுத்துவோருக்கான அபராதத்தை ஒரு மில்லியன் ரிங்கிட் வரை உயர்த்தும் தீர்மானத்தை சிலாங்கூர் மாநில அரசாங்கம் கொண்டு வரவுள்ளது.

அதற்கு நடப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய, சிலாங்கூர் நீர் நிர்வகிப்பு வாரியம் இணக்கம் தெரிவித்திருப்பதாக மாநில Menteri Besar தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநில சட்டமன்றக் கூட்டத்தில் அவ்விவகாரம் குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்றும் MB கூறினார்.

Sg Gong ஆற்று நீர் மாசடைந்து, அதனால் மில்லியன் கணக்கான மக்களுக்கான தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதை அடுத்து, MB அதனை தெரிவித்தார்.

அதே சமயம்,  Sg Gong சுற்றுப் பகுதியில் பரிசோதிக்கப்பட வேண்டிய 53 வளாகங்களை சுற்றுச் சூழல் துறை அடையாளம் கண்டிருப்பதாக Kosmo தகவல் கூறுகிறது.

இதேப் போன்ற தண்ணீர் மாசுபாடு பிரச்னை மீண்டும் எழாமல் இருப்பதை உறுதிச் செய்ய அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாநில MB தெரிவித்தார்.

இதனிடையே, கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏறக்குறைய 32  இடங்களில் தண்ணீர் விநியோகம் முழுமையாக வழக்க நிலைக்கு திரும்பியிருப்பதாக Air Selangor கூறியுள்ளது.

அது, இன்று காலை ஆறரை மணி வரைக்குமான நிலவரம் என அந்நிறுவனம் தெரிவித்தது.

எஞ்சியப் பகுதிகளுக்கான நீர் விநியோகத்தை சீரடைய வைக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வேளையில், தண்ணீர் விநியோகத் தடைக்கு காரணமான இருந்ததாக கூறப்படும் தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது அடுத்த வாரம் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

அவ்விவகாரம் தொடர்பில் கைதான அந்நால்வர் விசாரணைக்காக ஆறு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 

MTUC: தண்ணீர் கட்டணத்தில் கழிவு வேண்டும்!

தண்ணீர் விநியோகத் தடையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தண்ணீர் கட்டணத்தில் கழிவுச் சலுகை வழங்கப்பட வேண்டும் என மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் MTUC, Air Selangor நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளது.

தண்ணீர் இல்லாத இக்காலக்கட்டத்தில் பொது மக்கள் அனுபவித்து வரும் சிரமங்களுக்கு அது இழப்பீடாக அமையும் என MTUC கூறியுள்ளது.

மற்றொரு நிலவரத்தில், தண்ணீர் பிரச்னையை சாதகமாக்கிக் கொண்டு, தண்ணீர் பாட்டில்களின் விலையை உயர்த்தும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு அவ்வாறு எச்சரித்துள்ளது.

அவ்வாறு கொள்ளை லாபம் ஈட்டும் வியாபாரிகள் குறித்து புகாரளிக்குமாறு, அமைச்சு பயனர்களை கேட்டுக் கொண்டிருக்கிறது.
 

'dashcam': கட்டாயமாக்கும் திட்டம் இல்லை!

வாகனங்களில் dashcam பொருத்துவதை கட்டாயமாக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை.

அவ்வகை கேமராவைப் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படுகிறது தான் என்றாலும், அதனை அனைத்து வாகனங்களிலும் பொருத்த வேண்டும் என்ற கட்டாயத்தை கொண்டு வர இது சரியான நேரம் அல்ல என, சாலைப் பாதுகாப்பு ஆய்வுக் கழகம் MIROS, Berita Harian-னிடம் தெரிவித்துள்ளது.

dashcam-மை விட, தானியங்கி brek முறை AEB உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என அக்கழகம் கூறியுள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather