Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

உடனடியாக வங்கிகளைத் தொடர்பு கொள்ளுங்கள்!

Sep 02, 2020


மீட்சியை நோக்கிய நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை SOPயை மீறுவோருக்கு விதிக்கப்படும் தண்டத் தொகையை ஆயிரம் ரிங்கிட்டில் இருந்து பத்தாயிரம் ரிங்கிட் வரை உயர்த்தும் பரிந்துரை தொடர்பில் நடப்பில் உள்ள சட்டம் ஆய்வு செய்யப்படும்.

அது குறித்து கூடிய விரைவில் தேசிய சட்டத்துறை தலைவரைச் சந்தித்துப் பேசவிருப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.

அப்பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டால், அது அமைச்சரவைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு பின் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்றாரவர். 

Covid-19 தொடர்பில் கெடா, Tawar clusterரில் பதிவாகியுள்ள மூன்று சம்பவங்கள், அக்கிருமித் தொற்றை அதிவிரைவாகப் பரப்பக்கூடியவை எனக் கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

ஆய்வுக்கூட சோதனைகளில் அது தெரிய வந்திருக்கிறது. 

அந்த clusterரில் அதிகமான சம்பவங்கள் பதிவாவதற்கு அதுவும் ஒரு காரணம் என அவர் குறிப்பிட்டார்.

சிவகங்கை clusterரில் காணப்பட்ட வைரசுக்கும் Tawarரில் கண்டறியப்பட்டுள்ள வைரசுக்கும் ஒற்றுமைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

Tawarரில் இதுவரை 75 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  

Lahad Datuவில் புதிதாக Benteng cluster அடையாளம் காணப்பட்டுள்ளது.

Lahad Datuவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் உள்நாட்டவர் ஒருவர் உட்பட எழுவருக்கு Covid-19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணிகள் தொடரப்படுகின்றன. 

வங்கிக் கடன்களுக்கான தவணைப் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்க அரசாங்கம் வழங்கியுள்ள சலுகைக் காலத்தை நீட்டிக்க விரும்புவோர் உடனடியாக தத்தம் வங்கிகளைத் தொடர்பு கொண்டு அவ்விவரத்தைத் தெரிவிப்பது அவசியம்.

அவ்விண்ணப்பங்களை அங்கீகரிக்க சில நாட்கள் தேவைப்படும் என்பதால் தனிநபர்களும் சிறு, நடுத்தரத் தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்களும் காலம் தாழ்த்தாமல் அதனைச் செய்ய வேண்டும் என நிதியமைச்சு ஆலோசனை கூறியுள்ளது.

6 மாத கால அந்த moratorium சலுகை இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது.

அதற்குப் பின் இலக்கு வைக்கப்பட்டோருக்கு, தகுதிகளைப் பூர்த்திச் செய்திருப்பின் அச்சலுகைத் தொடரும்.  

மூத்த அரசியல்வாதி Tan Sri Dr Rais Yatim, நாடாளுமன்ற மேலவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலவைக் கூட்டத்தின் முதல் நாளான இன்று நடைபெற்ற வாக்களிப்பில், PKR செனட்டரை விட கூடுதல் வாக்குகள் கிடைத்ததை அடுத்து, BERSATU கட்சியைச் சேர்ந்தவருமான Rais புதிய சபாநாயகரானார். 

ஜூம் மாதம் தமது சேவைக் காலத்தை முடித்துக் கொண்ட ம.இ.கா தலைவர் Tan Sri S.A. Vigneswaranனின் இடத்தை அவர் நிரப்பியுள்ளார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather