← Back to list
பிரதமரின் பரிந்துரையை MTUC வரவேற்றது!
Sep 01, 2020
சமூக நலத் துறை JKM-மின் மாதாந்திர உதவித் தொகையை ஆயிரம் ரிங்கிட்டுக்கு உயர்த்தும், பிரதமரின் பரிந்துரையை மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் MTUC வரவேற்றுள்ளது.
அப்பரிந்துரை காலத்திற்கு ஏற்ற ஒன்று எனக் கூறிய MTUC, அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்றும் நம்புகிறது.
அந்த உதவி, B40 பிரிவில், 4 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவாக மாத வருமானம் ஈட்டுவோருக்கு தற்காலிக உதவியாக வழங்கப்பட் வேண்டும்.
அதே சமயம், SOCSO ஓய்வூதியம் பெறுவோருக்கு நிரந்தரமாக வழங்கப்பட வேண்டும் என்றும் MTUC பரிந்துரைத்துள்ளது.
நடப்பில், JKM, தகுதிப் பெற்றவர்களுக்கு 200ரில் இருந்து 300 ரிங்கிட் வரை அந்த உதவியை வழங்கி வருகிறது.
COVID-19 நிலவரங்கள்!
மலேசியாவுக்குள் நுழைய நீண்ட கால Pass வைத்திருக்கும் இந்திய, இந்தோனேசிய, பிலிப்பின்ஸ் நாட்டவர்களுக்கு, இந்நாட்டுக்குள் நுழைய உடனடியாக தடை விதிக்கப்படுகிறது.
அந்நாடுகளில் கொரோனா தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
அத்தடை அடுத்த வாரம் திங்கட்கிழமை அமுலுக்கு வருவதாக அமைச்சர் அறிவித்தார்.
Long-Term pass என்பது 6 மாதங்களுக்கும் குறையாமல் இந்நாட்டுக்குள் நுழைய வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் அனுமதியாகும்.
இதனிடையே, இம்மூன்று நாடுகள் தவிர்த்து இதர நாடுகளின் கொரோனா நிலவரம் தொடர்ந்து கண்காணிப்பட்டு வரும் என்றும் அமைச்சர் சொன்னார்.
தேவை ஏற்பட்டால், இதர நாடுகளை உட்படுத்திய இதே கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்றும் அவர் கோடி காட்டினார்.
மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் ஏறக்குறைய 780 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில், 670க்கும் அதிகமானோருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob கூறினார்.
அவற்றில் பெரும்பாலான கைது நடவடிக்கைகள் இரவு நேர கேளிக்கை மையங்களை உட்படுத்தியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
"Keingkarannya, ketidak patuhan di kelab-kelab malam dan sebagainya maka PBT diminta untuk membantu polis mengambila tindakan yang lebih lagi bukan saja setakat kompoun, tetapi menutup pusat-pusat perniagaan tersebut"
இவ்வேளையில், கெடா Amanjaya-வில் அமுலில் உள்ள கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, செப்டம்பர் 10ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
இவ்வேளையில், உலகளவில் COVID-19 சம்பவங்கள் எண்ணிக்கை 25.4 மில்லியனாக பதிவாகியிருக்கின்றது.
மரண எண்ணிக்கை எட்டு லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்குவதாக, அமெரிக்காவின் John Hopskin பல்கலைக்கழக தரவு காட்டுகின்றது.
அப்பெருந்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட முதல் மூன்று நாடுகளாக அமெரிக்கா, Brazil, இந்தியா ஆகியவை நீடிக்கின்றன.
யானைக் குட்டி மரணம்!
ஜொகூர் Kota Tinggi அருகே இன்று காலை, கார் மோதி ஆண் யானைக் குட்டி ஒன்று உயிரிழந்தது; எனினும், அந்த யானைக் குட்டியை மோதிய வாகனமோட்டிக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
அவ்விபத்துக்கு பிறகு, ஏறக்குறைய 300 கிலோகிராம் எடையிலான அந்த 2 வயது யானைக் குட்டியை, மற்றொரு யானை எழுப்பும் காட்சிகள் அடங்கிய 42 வினாடிகள் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியிருக்கின்றது.
சம்பவம் நிகழ்ந்த பகுதி, அடிக்கடி யானைகள் கடந்துச் செல்லும் பாதை என மாநில வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காத் துறை தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather