← Back to list
கிருமி நாசினி தெளித்து துப்புரவு செய்யும் பணிகள் தொடரப்படும்!
Sep 01, 2020
நெகிரி செம்பிலான், Port Dickson துறைமுகத்தில் Bunga எனும் புதிய cluster அடையாளம் காணப்பட்டுள்ளது.
அக்கப்பலில் உள்ள நான்கு பணியாளர்களுக்கு அக்கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அக்கப்பல் இதற்கு முன் சிங்கப்பூர் துறைமுகத்திற்குச் சென்றிருந்த விவரமும் தெரிய வந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் Covid-19 தொடர்பில் மேலும் இரு மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்று புதிதாக ஆறு Covid-19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.
உள்நாட்டில் பரவிய இரண்டு சம்பவங்களில் ஒன்று கெடாவில் Tawar clusterரில் பதிவானது.
மற்றொன்று Telaga clusterரில் பதிவு செய்யப்பட்டது.
நாடளாவிய நிலையில் குறிப்பிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து துப்புரவு செய்யும் பணிகள் தொடரப்படும்.
தீயணைப்பு, மீட்புத்துறை, Covid-19 சம்பவங்கள் பதிவாகியுள்ள இடங்களுக்கு அதில் முக்கியத்துவம் வழங்கும் என வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது.
Covid-19 கிருமித் தொற்றை ஒழிக்க தீயணைப்பு, மீட்புத்துறை கிருமி நாசினி தெளித்து துப்புரவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கெடா, Sungai Petani, Amanjayaவில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் இளஞ்சிவப்பு கைவளையம் அணிந்திருந்த இரு சகோதரர்களைக் காவல் துறை கைது செய்துள்ளது.
Amanjayaவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது தாத்தா வீட்டுக்குச் செல்வதாக அவர்கள் கூறியிருந்தனர்.
இந்திய முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பல்வேறு உடல் உபாதைகளால் அவதியுற்று வந்த 84 வயது பிரணாப், இதற்கு முன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அச்சமயத்தில் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டது.
அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சுயநினைவு திரும்பாமலேயே அவர் மரணமடைந்தார்.
2012 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை இந்திய அதிபராகப் பொறுப்பு வகித்த பிரணாப், நிதியமைச்சர், தற்காப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather