← Back to list
கெடாவில் 3 பகுதிகளில் நிர்வாக முறையிலான MCO!
Aug 27, 2020
Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக ஐந்து சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் மூன்று உள்நாட்டில் பரவியவை.
மேலும் 16 பேர் அக்கிருமித் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
மரண எண்ணிக்கையில் மாற்றமில்லை.
மொத்த மரண எண்ணிக்கை 125 ஆகவே இருக்கிறது.
கெடா, Aman Jayaவில் மூன்று பகுதிகளில் நிர்வாக முறையிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்படுகிறது.
Kenanga, Mawar, Melor ஆகிய மூன்று இடங்களே அவை என தற்காப்பு அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
அப்பகுதிகளைச் சேர்ந்த 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என அவர் கூறினார்.
அதோடு அங்கு வணிகத் தளங்கள் காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட முடியும்.
பள்ளிகள், டியூஷன் மையங்கள், கல்லூரிகள் ஆகியவற்றைத் திறக்க அனுமதிக்கப்படாது.
வணிகம் உள்ளிட்ட தளங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் உடல் வெப்பத்தைப் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை.
MySejahtera செயலியைப் பயன்படுத்தாதவர்களின் பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றை மட்டுமே வணிகர்கள் பதிவு செய்தால் போதுமானது என தற்காப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.
இதற்கு முன் நடவடிக்கை எடுக்கப்பட்ட வணிகத் தளங்கள், அதிகாரத்துவத் தரப்பைத் தொடர்பு கொள்ளுமாறு அது கேட்டுக் கொண்டது.
நாடு முழுவதும் உள்ள வணிகத் தளங்கள் காலை 8 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை மட்டுமே செயல்பட முடியும்.
அரசாங்கம் அதனை மீண்டும் நினைவுறுத்தியிருக்கிறது.
பலசரக்குக் கடைகள் உட்பட சில வணிகத் தளங்கள் வரையறுக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி செயல்படுவதாகப் புகார் கிடைத்திருப்பதை அடுத்து அது அவ்வாறு எச்சரித்துள்ளது.
மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 63 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 60 பேருக்குத் தண்டம் விதிக்கப்பட்டது.
-----------------
பிற செய்திகள்.....
ஜொகூர் Pemanis சட்ட மன்ற உறுப்பினர் Dr Chong Fat Full, தாம் Bersatu கட்சியில் இணைந்திருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
PKRரின் அந்த முன்னாள் உறுப்பினர் இதற்கு முன் சுயேட்சை சட்ட மன்ற உறுப்பினராக இருந்தார்.
-----
சமூக வலைத்தளத்தில் மாமன்னரைச் சிறுமைப்படுத்தும் கருத்துகளைப் பதிவேற்றிய e-hailing ஓட்டுனர் ஒருவருக்கு 16 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-----
கடந்தாண்டு நியூசிலாந்து, Christchurchச்சில் இரு பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்தி 51 பேர் பலியாகக் காரணமான ஆடவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather