Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Messi-யால் City குஷி!

Aug 27, 2020


Image: Yahoo! Sports


எப்படியாவது சமாதானம் செய்து Lionel Messi-யை தக்க வைத்துக் கொள்ள Barcelona தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது!

Messi-யின் ஆற்றலும், அனுபவமும் தங்களுக்கு தேவைப்படுவதாக Barca-வின் விளையாட்டு இயக்குநர் கூறியுள்ளார்.

இப்பருவத்தில் La Liga வெற்றியாளர் பட்டத்தை கோட்டை விட்டு, Champions லீக் காலிறுதியிலும் படுதோல்விக் கண்டு மிக மோசமான சரிவுகளைச் சந்தித்த Barca-வின் அடுத்த கட்ட எழுச்சிக்கு கண்டிப்பாக Messi தேவை; Messi இல்லாத Barca-வை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்றார் அவர்.

Image: Daily Express

இந்நிலையில், அணியில் இருந்து வெளியேற அனுமதிக் கேட்டுள்ள Messi-யை வாங்கும் முயற்சியில் Man City இறங்கியிருக்கின்றதாம்.

Messi-க்கு மூன்றாண்டுகள் ஒப்பந்தம் வழங்க தயாராகியிருக்கும் City, பின்னர் அவரை அமெரிக்காவில் உள்ள New York City FC-யில் இணைத்துக் கொள்வதும் பற்றியும் யோசித்து வருகின்றது.

இதற்கிடையில், Messi-யை வாங்கும் சக்திக் கொண்ட அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட PSG, Messi பக்கம் திரும்பாது என்றே கூறப்படுகிறது.

அவருக்கான 64 மில்லியன் பவுன் ஆண்டு அடிப்படைச் சம்பளம் தங்களுக்கு கட்டுப்படியாகாது என அந்த France பணக்கார கிளப் கருதுகின்றதாம்.

நிலைமை இவ்வாறிருக்க, 33 வயதாகும் Messi-யின் கால்பந்து வாழ்க்கை அடுத்து எப்படி இருக்கும் என்ற தனது கருத்தை முன்வைக்கிறார், பெர்னாமா மலாய் செய்தி தயாரிப்பாளர் ஜெயகுமார் ஆதிமூலம்.

ஜெயகுமார் ஆதிமூலம்

 

"என்னைப் பொறுத்த வரை Lionel Messi, மிஞ்சிப் போனால், இன்னும் ஏறக்குறைய ஈராண்டுகளுக்கு தொழில் முறை கால்பந்தாட்டங்களில் விளையாட வாய்ப்புண்டு" எனக் கூறிய அவர், Messi-யை வாங்கும் அணிக்கு எம்மாதிரியான சாதக பாதக விளைவுகள் வரலாம் என்பதையும் அவர் விவரித்தார்.

"Messi-யை வாங்க போகும் அணி, அவரது Brand காரணமாக ஆதாயமடையலாம்; அவரது Brand காரணமாக அக்கிளப்பின் அனைத்துலக வியாபாரம் பெருகும். ஆனால் Messi-யால் பிரிமியர் லீக்கையோ அல்லது Champions லீக்கையோ வெல்லும் ஆற்றல் உண்டா என்றக் கேட்டால், நான் இல்லை என்று தான் சொல்வேன்.
அவர் ஓர் ஜாம்பவான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை; ஆனால் நடப்பு சூழ்நிலையை அடிப்படையாக வைத்து நான் இக்கருத்தை கூறுகின்றேன். காரணம் கடந்த இரண்டு மூன்றுப் பருவங்களாக அவரால் Barca-வில் மிகப் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை; தவிர, 33 வயதாகும் Messi-க்காக மிகப் பெரிய அளவில் எந்த அணி முதலீடு செய்யும் என்ற கேள்வியையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது. எனது கணிப்பின் படி, இப்போதைக்கு, PSG, Man City, Man United ஆகிய அணிகள் Messi-யை வாங்க முயற்சிக்கலாம்"

Image: CNN International 

Messi-யை சூழ்ந்துள்ள இந்த சர்ச்சை விரைவில் முடிவுக்கு வரும் என்பதே அவரது ரசிகர்கர்கள் மட்டுமின்றி கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பாகியிருக்கின்றது.

தொகுப்பு: சௌரியம்மாள் ராயப்பன்


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather