Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

இணையத் தளமொன்றில் நடத்தப்படும் UPSR, PT3 தேர்வுகளில் தங்களுக்குச் சம்பந்தமில்லை - கல்வியமைச்சு!

Aug 26, 2020


Covid-19 தொடர்பில் நாட்டில் புதிதாக ஆறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அவற்றில் 5 உள்நாட்டில் பரவியவை என சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

அந்த ஐந்து சம்பவங்களில் மூன்று கெடா, Tawar cluster தொடர்புடையவை.

மேலும் எழுவர் அக்கிருமித் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

மொத்த மரண எண்ணிக்கை 125 ஆகவே உள்ளது. 

வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய அமைச்சர் ஒருவர் தம்மைத் தாமே தனிப்படுத்திக் கொள்ளத் தவறியிருப்பது குறித்து நேர்மையான, வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல் துறை உத்தரவாதம் வழங்கியிருக்கிறது.

சம்பந்தப்பட்ட அமைச்சர் இன்று காலை வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

அதன் தொடர்பில் மேலும் சிலர் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என தேசிய காவல் படைத் தலைவர் தெரிவித்தார்.

அந்த அமைச்சரின் செயல் குறித்து பலர் கேள்வி எழுப்பி அதிருப்தியை வெளியிட்ட நிலையில், சுகாதார அமைச்சு அவருக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

இணையத் தளமொன்றில் மின்னியல் வழி ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான UPSR, மூன்றாம் படிவ மாணவர்களுக்கான PT3 தேர்வுகள் நடத்தப்படுவதில் தங்களுக்குச் சம்பந்தம் இல்லை என கல்வியமைச்சு தெரிவித்திருக்கிறது.

அதனைக் கடுமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட அமைச்சு, கல்விச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட தரப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது.

பொதுமக்கள் குறிப்பாக ஆறாம் ஆண்டு மற்றும் மூன்றாம் படிவத்தில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை கல்வியமைச்சு, தேர்வு வாரியம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ அகப்பக்கங்களில் பெற வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

Covid-19 பரவலால் இவ்வாண்டுக்கான UPSR, PT3 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக கல்வியமைச்சு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று நாடு முழுவதும் 81 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 59 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

----------  

பிற செய்திகள்.....

பிரதமர் பதவிக் காலத்தை இரு தவணைகளாக அதாவது பத்து ஆண்டுகள் எனக் கட்டுப்படுத்த Pakatan Harapan கொண்டு வந்த சட்ட மசோதாவை Perikatan Nasional மீட்டுக் கொண்டுள்ளது.

----- 

சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட முடிவை எதிர்த்து, 33 சட்டமன்ற உறுப்பினர்கள் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு செப்டம்பர் ஏழாம் தேதி செவிமடுக்கப்படும் என மேல் முறையீட்டு நீதிமன்றம்  அறிவித்துள்ளது. 

----- 

தாமும் மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் BERSATUவில் இணைவதாகக் கூறப்படுவதை AMANAH கட்சியின் துணைத் தலைவர் Datuk Salahuddin Ayub மறுத்திருக்கிறார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather