← Back to list
மாணவர்கள் முகக் கவசத்தை அணியலாம்!
Aug 25, 2020
நாட்டில் Covid-19 தொடர்பில் 11 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 9 உள்நாட்டில் பரவியதாகும்.
அந்த 9 சம்பவங்களில் 5 கெடா, Tawar cluster சம்பந்தப்பட்டவை என சுகாதாரத் தலைமை இயக்குனர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.
மேலும் அறுவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்த மரண எண்ணிக்கை 125 ஆகவே நீடிக்கிறது.
12 வயதுக்குக் கீழ்பட்ட மாணவர்கள் பள்ளிகளில் இருக்கும் போது முகக் கவசத்தை அணிய அனுமதி அளிக்கப்படுகிறது.
தற்காப்பு அமைச்சு அதனைத் தெரிவித்திருக்கிறது.
அடிக்கடி மாற்ற வேண்டிய சுவாசக் கவசத்தை வாங்குவது சிரமமாக இருப்பதாக பெற்றோர்கள் புகார் கூறியிருப்பதை அடுத்து அத்தளர்வு வழங்கப்பட்டுள்ளதாக அது கூறியது.
கெடாவில், Tawar clusterரால் பாதிக்கப்பட்டுள்ள நான்கு பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைக் கடுமையாக்க வேண்டிய அவசியம் இல்லை.
மாறாக, அவ்விடங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும் என தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே பெர்லிசில் இரு கிராமங்களிலும் கெடாவில், நான்கு பகுதிகளிலும் கடுமையாக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நாளை முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது.
சம்பந்தப்பட்ட இடங்களில் புதிதாக Covid-19 சம்பவங்கள் பதிவாகாததால் அம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.
கெடாவில் சிவகங்கை cluster ஏற்படக் காரணமாக இருந்த nasi kandar உணவக உரிமையாளர் Pokok Sena சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவர் இதற்கு முன் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை கூறியது.
அவருக்கு ஐந்து மாதங்கள் சிறைத் தண்டனையும் 12 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இம்மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் மீட்சியை நோக்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது இவ்வாரம் தெரிய வரலாம்.
அது குறித்து பிரதமர் அறிவிப்பு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
----------------
பிற செய்திகள்.....
தேசியக் கொடியை தலைகீழாகப் பொருத்தும் தரப்பினருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை வழங்கியுள்ளது.
அண்மையில் சிலாங்கூர் Rawang-கில் தங்களது லாரியின் முன் புறம், Jalur Gemilang கொடியை தலைகீழாகப் பறக்க விட்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டதை அது சுட்டிக் காட்டியது.
-----
Pandan Perdanaவில் சீன நாட்டுப் பெண் ஒருவரிடம் வழி பறி செய்தது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பணியில் இருந்து நிறுத்தப்பட்ட முன்னாள் காவல் வீரர் என சிலாங்கூர் காவல் துறை கூறியிருக்கிறது.
அச்சம்பவம் தொடர்பில் அவரது இரு நண்பர்கள் தேடப்படுகின்றனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather