← Back to list
12 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளும் சுவாசக் கவசம் அணிய வேண்டும்!
Aug 25, 2020
COVID-19 பரவலை கட்டுப்படுத்த, பெரியவர்களைப் போலவே, 12 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளும், சுவாசக் கவசம் அணிய வேண்டும் என்ற உலக சுகாதார நிறுவனம் WHO-வின் பரிந்துரை வரவேற்கத்தக்கது!
இவ்வயது பிள்ளைகளுக்கு, கூடல் இடைவெளியை கடைப்பிடித்தல் என்பது ஒரு சவாலான காரியம் என்பதை Dr Muhammad Hazizi Muhammad Hasani சுட்டிக் காட்டினார்.
COVID-19 தாக்கத்தை குறைக்கவும், சுவாசப் பிரச்னைகள் ஏற்படாமல் இருப்பதை உறுதிச் செய்யவும், சுவாசக் கவசத்தை சரியான முறையில் அணிய வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் புதிதாக ஏழு COVID-19 சம்பவங்கள் பதிவான வேளை, 184 பேர் அப்பெருந்தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
உலகளவில், COVID-19 சம்பவங்கள், 24 மில்லியனை நெருங்கியுள்ளது; ஆக அதிகமான சம்பவங்கள், அமெரிக்கா, Brazil மற்றும் இந்தியாவில் பதிவாகியுள்ளன.
Bali இவ்வாண்டு இறுதி வரை திறக்கப்படாது!
அடுத்த மாதம் தொடங்கி Bali தீவை சுற்றுப்பயணிகளுக்கு திறக்கும் திட்டத்தை இந்தோனிசியா கைவிட்டிருக்கின்றது.
இவ்வாண்டு இறுதி வரை அத்தீவுக்கு வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனிசியாவில், COVID-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதே காரணம்; ஆகக் கடைசியாக ஆயிரத்து 800 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நேற்று ஒரு நாளில் 79 பேர் அத்தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
சிறார் உடல் பருமன் பிரச்னை வருத்தமளிக்கிறது!
நாட்டில், சிறார் உடல் பருமன் பிரச்னை அதிகரித்து வருவது வருத்தமளிப்பதாக, சுகாதார அமைச்சு கூறுகின்றது.
ஆசியாவுக்கான சிறார் பருமன் பிரச்னை குறித்தப் பட்டியலில் மலேசியா மூன்றாம் இடத்தில் இருப்பதாக, முகநூலில், அமைச்சின் உணவுப் பிரிவுக்கான பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பிரச்னையை களைய, பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை ஏற்படுத்தித் தருவதில் பெற்றோர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Slim-மில் இன்று முன்கூட்டியே வாக்களிப்பு!
பேரா, Slim சட்ட மன்றத் தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு 260க்கும் மேற்பட்ட காவல் வீரர்கள் இன்று முன் கூட்டியே வாக்களிக்கின்றனர்.
காலை 8 மணி தொடங்கி மாலை ஐந்தரை மணி வரை அந்த முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெறும்; Slim இடைத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.
மும்பையில் துயரம்!
இந்தியா, மும்பையில், 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில், குறைந்தது 70 பேர் உயிரோடு புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது; மழைக்கு மத்தியில், அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடருகின்றன.
இதுவரை 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர்; காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather